BOB FD Interest Rates in Tamil
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஒரு பொதுவான ஆசை இருக்கும். அது என்னவென்றால் தனது வாழ்க்கையை எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் ஏற்படாமல் சீராக நடத்தி செல்லவேண்டும் என்பது தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இது சாத்தியமாகுமா என்றால் நம்மில் பலரின் பதில் சாத்தியமாகாது என்று தான் இருக்கும். ஆனால் நான் கூறுகின்றேன் அது சாத்தியமாகும் என்று. இப்பொழுது உங்கள் அனைவரின் மனத்திலேயும் ஒரு கேள்வி எழும் இன்றைய சூழலில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளித்து குடும்பத்தை நடத்தி செல்வதற்கே பல பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியுள்ளதே, இந்நிலையில் எவ்வாறு நாம் நமது வாழ்க்கை முழுவதும் எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் இல்லாமல் நடத்தி செல்வது. அதற்கான பதில் உங்களின் பணத்தை சரியான முறையில் முதலீடு செய்வது அல்லது சேமிப்பது என்பதாகும்.
ஆம் நண்பர்களே நீங்கள் சேமிக்க தொடங்கிவிட்டீர்கள் என்றால் அது உங்களுக்கு தக்க சமயத்தில் கைகொடுக்கும். அதனால் அனைவருமே சேமிப்பை தொடங்குங்கள். உங்களுக்கு உதவும் நோக்கத்தில் தான் இன்று BOB வங்கியின் FD திட்டத்தை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள போகின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த FD திட்டத்தில் சேமித்தால் எவ்வளவு வட்டியும் முதிர்வு தொகையும் கிடைக்கும் போன்றவற்றை எல்லாம் அறிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
BOB FD Interest in Tamil:
இந்த BOB வங்கியின் FD திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் அதிகபட்சம் உங்கள் விருப்பத்தை பொறுத்து எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.
அதேபோல் இந்த திட்டத்தில் நீங்கள் 7 நாட்கள் முதல் 120 மாதங்கள் (10 வருடம்) வரை சேமிக்கலாம். இந்த FD திட்டத்தில் நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்து உங்களுக்கான வட்டிவிகிதம் மாறுபடும்.
காலத்தை பொறுத்து உங்களுக்கு எவ்வளவு வட்டிவிகிதங்கள் கிடைக்கும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
1,17,152 வட்டியாக மட்டும் கிடைக்கக்கூடிய சேமிப்பு திட்டம்
வட்டிவிகிதம்:
காப்பீடுக்காலம் | General Citizen | Senior Citizen |
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை | 3.00% | 3.50% |
15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை | 3.00% | 3.50% |
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை | 4.50 | 5.00 |
91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை | 4.50 | 5.00 |
181 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை | 5.25 | 5.75 |
211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை | 5.75 | 6.25 |
271 நாட்கள் மற்றும் அதற்கு மேல் மற்றும் 1 வருடத்திற்கும் குறைவானது | 5.75 | 6.25 |
1 ஆண்டு | 6.75 | 7.25 |
1 வருடம் முதல் 400 நாட்கள் வரை | 6.75 | 7.25 |
400 நாட்களுக்கு மேல் மற்றும் 2 ஆண்டுகள் வரை | 6.75 | 7.25 |
2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகள் வரை | 7.05 | 7.55 |
3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகள் வரை | 6.50 | 7.15 |
5 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரை | 6.50 | 7.50 |
BOB வங்கியின் FD திட்டத்தில் 2,00,000 சேமித்தால் எவ்வளவு வட்டி மற்றும் முதிர்வு தொகை:
முதிர்வு காலம் | டெபாசிட் தொகை | General Citizen | Senior Citizen | ||
வட்டி தொகை | மொத்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை | ||
5 வருடம் | 2,00,000 ரூபாய் | 76,084 ரூபாய் | 2,76,084 ரூபாய் | 85,049 ரூபாய் | 2,85,049 ரூபாய் |
555 நாட்களுக்கு இப்படி ஒரு வட்டியை யாராலும் இனிமேல் தரவேமுடியாது
Canara வங்கியில் 1 லட்சம் செலுத்தினால் 2,04,132 ரூபாய் பெறக்கூடிய அருமையான திட்டம்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |