BOB RD Interest Rates
பாங்க் ஆஃப் பரோடா ( BOB) வங்கி, குஜராத்தின் வதோதராவை தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் ஒரு இந்திய பொதுத்துறை வங்கியாகும். இவ்வங்கி பலவகையான லோன்களையும் திட்டங்களையும் வழங்கி வருகிறது. எனவே அந்தவகையில் BOB வங்கியின் RD திட்டத்தின் வட்டி விவரங்களை பற்றித்தான் இப்பதிவில் பார்ப்போகிறோம். நாம் அனைவருமே வட்டி அதிகமாக உள்ள வங்கிகளில் தான் சேமிக்க நினைப்போம். ஆனால் எந்த வங்கியில் அதிக வட்டி கிடைக்கும் என்று பலபேருக்கு தெரியாது. ஒவ்வொரு வங்கியும் ஒவொரு வகையான வட்டி விகிதங்களை அளிக்கும். எனவே ஒவ்வொரு வங்கியின் வட்டி விகிதங்களை பற்றியும் தெரிந்துகொள்ளும் வகையில் நம் பொதுநலம் பதிவில் வங்கிகளின் வட்டி விவரங்களை பதிவிட்டு வருகிறோம். அதேபோல் இன்றைய பதிவில் BOB வங்கியின் RD திட்டத்தின் வட்டிவிகிதங்களை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
மாதந்தோறும் 1000 ரூபாய் RD-யில் டெபாசிட் செய்தால் வருமானம் எவ்வளவு கிடைக்கும்..
BOB RD Interest Rates 2023 in Tamil:
முதிர்வு காலம் | வட்டி விகிதம் | |
General citizen | Senior citizen | |
180 நாட்கள் | 3.70% | 4.20% |
181 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை | 4.30% | 4.80% |
271 நாட்கள் முதல் 364 நாட்கள் வரை | 4.40% | 4.90% |
1 ஆண்டு | 4.90% | 5.40% |
1 வருடம் 1 நாள் முதல் 400 நாட்கள் வரை | 5.00% | 5.50% |
401 நாட்கள் முதல் 2 ஆண்டுகள் வரை | 5.00% | 5.50% |
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை | 5.10% | 5.60% |
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை | 5.25% | 5.75% |
5 ஆண்டுகள் 1 நாள் முதல்10 ஆண்டுகள் வரை | 5.25% | 5.75% |
கால அளவு:
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 180 நாட்கள் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரையிலான கால அளவுகளை தேர்வு செய்து சேமிக்கலாம். எனவே நீங்கள் தேர்வு செய்யும் கால அளவிற்கு ஏற்றவாறு அதன் வட்டிவிகிதமும் மாறுபடும்.
1 லட்சம் செலுத்தி 1,44,995 ரூபாய் பெறக்கூடிய அருமையான பிக்சட் டெபாசிட் திட்டம்.!
முதலீடு தொகை:
BOB வங்கியின் RD திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் சேமிக்க தொடங்கலாம்.
உதாரணமாக, இத்திட்டத்தில் மாதம் மாதம் 2,000 ரூபாய் சேமித்தால் முதிர்வு காலத்தில் எவ்வளவு தொகை பெறலாம்.?
முதிர்வு காலம் | மாத சேமிப்பு தொகை |
General citizen | Senior citizen | |||
வட்டி தொகை | மொத்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை | |||
5 ஆண்டுகள் | 2,000 ரூபாய் |
17,400 ரூபாய் |
1,37,400 ரூபாய் |
19,211 ரூபாய் | 1,39,211 ரூபாய் |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |