1 Lakh Business Loan in Tamil
இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாக செயல்படும் இந்தியன் வங்கி 1907 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இவ்வங்கி பொதுமக்களுக்கு பலவிதமான சேமிப்பு திட்டங்களையும், கடன்களையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தியன் வங்கியில் வழங்கப்படும் தொழில்கடன் பற்றிய விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம். பொதுவாக நாம் வங்கிகளிலோ அல்லது பிற இடங்களிலோ கடன் வாங்குவதற்கு முன்பாக அக்கடனை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். எனவே நீங்கள் ஒரு இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருந்து இந்தியன் வங்கியில் தொழில்கடன் வாங்க நினைத்தான் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள அக்கடனை பற்றிய வட்டிவிகிதம், EMI மற்றும் கால அளவு போன்ற விவரங்களை எடுத்துக்காட்டுடன் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Indian Bank Business Loan 2023 Details in Tamil:
வட்டி விகிதம்:
இந்தியம் வங்கியில் வழங்கப்படும் தொழில்கடனிற்கு 8.30% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மேலும், நீங்கள் வாங்கும் லோன் தொகையை பொருத்தும் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
டெபாசிட் தொகை:
இந்தியம் வங்கியில் நீங்கள் குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதல் அதிகபட்சம் 25 கோடி வரை பிசினெஸ் லோன் பெற்று கொள்ளலாம்.
கால அளவு:
1 வருடம் முதல் 15 வருடம் வரையிலான கால அளவை தேர்வு செய்து நீங்கள் இந்தியன் வங்கியில் பிசினெஸ் லோன் பெற்று கொள்ளலாம்.
எடுத்துக்காட்டு:
நீங்கள், இந்தியன் வங்கியில் உதாரணமாக 5 வருட கால அளவை தேர்வு செய்து 1 லட்சம் பிசினெஸ் லோன் பெறுகிறீர்கள் என்றால் உங்களுக்கு 8.30% என்ற அளவில் வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.
எனவே, இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும்போது மொத்த வட்டித்தொகையாக 22,521 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும், மாத EMI ஆக 2,042 ரூபாய் செலுத்தி வர வேண்டும்.
எனவே நீங்கள் 5 வருடத்திற்குள் நீங்கள் வாங்கிய லோன் தொகை மற்றும் வட்டியை சேர்த்து மொத்தமாக 1,22,521 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |