கனரா வாங்கி ரெக்கரிங் டெபாசிட் திட்டம்
சம்பாதிக்கின்ற பணத்தை வைப்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து வைத்தால் ஏதோ ஒரு நேரத்தில் நம் குழந்தைகளுக்கு உதவும். அதுமட்டுமில்லாமல் நாம் காலம் முழுவதும் உழைத்து கொண்டிருக்க முடியாது. வயது வயது ஆக ஆக நம் உடல்நிலையானது ரெஸ்ட் எடுக்க சொல்லும். அதனால் இப்போது சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து வைப்பது அவசியமானது. எதில் சேமிப்பது என்ற குழப்பம் பெரும்பான்மையானவர்களிடம் உள்ளது. அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் சேமிப்பு பற்றிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் கனரா வங்கியில் மாதந்தோறும் 1500 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
கனரா வங்கியில் 1500 ரூபாய் சேமித்தால் எவ்வளவு கிடைக்கும்:
டெபாசிட் தொகை:
கனரா வங்கி ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சம் 50 ரூபாய் செலுத்தி கணக்கை திறக்கலாம்.
டெபாசிட் காலம்:
இந்த திட்டத்தில் டெபாசிட் காலமானது 6 மாதம் முதல் 10 வருடம் வரை கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.
வட்டி:
வட்டி விகிதமானது நீங்கள் தேர்வு செய்யும் கால அளவை பொறுத்து மாறுபடுகிறது.
RD கால அளவு | வட்டி விகிதம் | |
General citizen | Senior citizen | |
1 வருடம் முதல் 3 வருடம் வரை | 6.80% | 7.30% |
1 வருடம் | 6.75% | 7.25% |
1 ஆண்டு | 7.00% | 7.50% |
3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை | 6.50% | 7.% |
6 மாதம் முதல் 1 வருடம் வரை | 5.50% | 6% |
ஜெனரல் சிட்டிசனுக்கு 5 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்:
டெபாசிட் தொகை | சேமிப்பு காலம் | வட்டி தொகை | சேமித்த தொகை | முதிர்வு தொகை |
Rs.1500 /- | 5 வருடம் | Rs. 16,487 | Rs. 90,000 | 1,06,487 |
சீனியர் சிட்டிசனுக்கு 5 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்:
டெபாசிட் தொகை | சேமிப்பு காலம் | வட்டி தொகை | சேமித்த தொகை | முதிர்வு தொகை |
Rs.1500 /- | 5 வருடம் | Rs. 17,898 | Rs. 90,000 | 1,07,898 |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |