8.2% வட்டி அளிக்கும் கனரா வங்கியில் சீனியர் சிட்டிசன் 2 லட்சம் செலுத்தினால் கிடைக்கும் அசல் எவ்வளவு..?

Advertisement

Canara Bank Senior Citizen Scheme 2023

பணம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது பற்றி நாம் அனைவருமே தெரிந்து இருப்போம். ஏனென்றால் தற்போது உள்ள நடைமுறை வாழ்க்கையில் இதனுடைய முக்கியத்துவம் என்ன என்பதை நாம் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவை எல்லாம் தானாகவே புரிந்து விடும். இவற்றை எல்லாம் புரிந்தால் மட்டும் போதாது அதற்கான செயலாக நாம் என்ன செய்து இருக்கிறோம் என்பதை தான் பார்க்க வேண்டும். அதாவது நம்முடைய நிகழ்கால தேவை அல்லது எதிர்கால தேவை என இவற்றினை அறிந்து ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் பணத்தினை முதலீடு செய்ய வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல் அதற்கான வட்டி, அசல் எவ்வளவு என இவற்றை எல்லாமும் கூட தெரிந்து இருக்க வேண்டும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கனரா வங்கி சீனியர் சிட்டிசன் திட்டம்:

வயது தளர்வு:

சீனியர் சிட்டிசனை பொறுத்தவரை வயது தளர்வு என்பது 60 வயதிற்கு மேலே தான் இருக்க வேண்டும். ஆகவே 60 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் இதில் சேரலாம்.

சேமிப்பு தொகை எவ்வளவு:

  • குரைந்தபட்ச சேமிப்பு தொகை 1,000 ரூபாய்
  • அதிகப்பட்ச சேமிப்பு தொகை 15,00,000 ரூபாய்

வட்டி விகிதம்%:

மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதமாக தற்போது 8.2% வரை அளிக்கப்படுகிறது. மேலும் 5 வருடத்திற்கு நிலையானது.

முதிர்வு காலம்:

இந்த திட்டத்திற்கான சேமிப்பு காலமாக முதலில் 5 வருடம் அளிக்கப்படுகிறது. மேலும் நீட்டிப்பு காலமாக 3 வருடம் அளிக்கப்படுகிறது.

HDFC வங்கியில் 3.5 லட்சம் Home Loan பெற்றால் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும்

2 லட்சம் ரூபாய் செலுத்தினால் 5 வருடத்தில் கிடைக்கும் தொகை எவ்வளவு:

முழு விளக்கம்:

சேமிப்பு தொகை: 2,00,000 ரூபாய் 

முதிர்வு காலம்: 5 வருடம் 

வட்டி விகிதம்: 8.2%

வட்டி தொகை: 82,000 ரூபாய்

3 மாத வட்டி தொகை: 4,100 ரூபாய் 

அசல் தொகை: 2,82,000 ரூபாய் 

கனரா வங்கியில் 20,000 ரூபா முதலீடு போட்டா எவ்வளவு கிடைக்கும்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement