Canara Bank Credit Card Details
பொதுவாக இன்றைய காலத்தை பொறுத்தவரை நம்முடைய தேவைக்காக நிறைய பொருட்கள் நாம் பயன்படுத்தி வருகிறோம். அத்தகைய பொருட்கள் யாவும் நம்முடைய அத்தியாவசிய தேவைக்காக பெரும்பாலும் பயன்படக்கூடிய ஒன்றாக உள்ளது. அதில் முக்கியமான ஒன்றாக கிரெடிட் கார்டும் கருதப்படுகிறது. இந்த நவீன காலத்தை பொறுத்தவரை கிரெடிட் கார்டும் அத்தியாவசியவனற்றில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்தகைய கிரெடிட் கார்டினை சில நபர்கள் வைத்து இருக்கிறார்கள் ஒரு சிலர் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் எந்த ஒரு வங்கியில் கிரெடிட் கார்டு பெற்றாலும் அதனை பற்றி நாம் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று கனரா பேங்க் கிரெடிட் கார்டு பற்றிய தகவலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
Canara Bank Credit Card Name:
- Global Gold
- VISA Classic
- MasterCard
- RuPay Platinum
- RuPay Select
- RuPay Secured
Canara Credit Card Details in Tamil:
கிரெடிட் என்பது உங்களுடைய சிபில் மதிப்பெண் மற்றும் மற்ற விவரங்களை பொறுத்து தான் அமைகிறது. மேலும் இத்தகைய கிரெடிட் கார்டுகள் மாத சம்பளம் பெறுபவர் மற்றும் தொழில் புரிபவர் என இரண்டு வகையான நபர்களுக்கும் வழங்கப்படுகிறது.
கனரா வங்கியில் மேலே சொல்லப்பட்டுள்ள கிரெடிட் கார்டு மட்டும் இல்லாமல் நிறைய வகையான கார்டுகள் காணப்படுகிறது. ஆனால் கனரா பேங்க் கிரெடிட் கார்டின் தோராயமான ஆண்டு வட்டி விகிதம் 2.5% முதல் 30% வரை ஆகும்.
அதுபோல முதல் 50 நாட்களுக்கு நீங்கள் பெரும் கனரா பேங்க் கிரெடிட் கார்டிற்கான வட்டி விகிதம் ஆனது கிடையாது. மேலும் இந்த கார்டினை நீங்கள் EMI கார்டாக வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.
மேலும் நீங்கள் பெற்ற தொகையினை திரும்ப செலுத்துவதற்கான காலம் என்று பார்த்தால் தோராயமாக 30 மாதங்கள் ஆகும்.
கனரா கிரெடிட் கார்டின் சிறப்பு அம்சங்கள்:
Joining Fees:
கனரா பேங்கில் Master கிரெடிட் கார்டு பெற்றால் அதற்கான Joining Fees தோராயமாக வருடத்திற்கு இரண்டு முறை 2,000 ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Annual Fees:
Global Gold, RuPay Select, RuPay Secured, RuPay Platinum, Master Card மற்றும் VISA Classic ஆகிய கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணம் என்பது கிடையாது என்று கூறப்படுகிறது.
உங்களுடைய பில் தேதிற்குள் நீங்கள் கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் அதற்காக அபராத தொகையும் சேர்த்து செலுத்து வேண்டியது இருக்கும்.
மேலும் நீங்கள் பெரும் கார்டின் வகையினை பொறுத்து உங்களுக்கு மெடிக்கல், ஆன்லைன் ஷாப்பிங், ஹோட்டல், தியேட்டர், Bill கட்டுதல், Flight டிக்கெட் புக்கிங், பெட்ரோல் மற்றும் டீசல் போடுதல், Movie டிக்கெட் புக்கிங் செய்தால் ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட அளவிலான ரிவாய்டு பாயிண்ட்டுகள் கிடைக்கும்.
குறிப்பு: இத்தகைய சிறப்பு அம்சங்கள் அனைத்தும் ஒவ்வொரு கார்டு ஏற்றவாறும் மாறும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |