Canara Bank FD Interest Rate in Tamil
பொதுவாக இன்றைய சூழலில் அனைவரிடமும் தனது எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அப்படி சேமிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் உள்ள அனைவரும் போஸ்ட் ஆபிஸில் அல்லது வங்கியில் தான் சேமித்து வருகின்றன. அவ்வாறு சேமிக்கும் பொழுது நாம் சேமிக்க போகும் திட்டத்தை பற்றிய முழுவிவரங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் பல்வேறு வங்கியில் உள்ள சேமிப்பு திட்டங்களை பற்றி விரிவாக பார்த்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்று கனரா வங்கியின் FD திட்டத்தை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த FD திட்டத்தில் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம். அப்படி சேமித்தால் நமக்கு எவ்வளவு வட்டியும் முதிர்வு தொகையும் கிடைக்கும் போன்றவற்றை எல்லாம் அறிந்து கொள்ளுங்கள்.
Canara Bank FD Interest Rates in Tamil:
இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமிக்கலாம். அதேபோல் இந்த திட்டத்தில் நீங்கள் 7 நாட்கள் முதல் 120 மாதங்கள் (10 வருடம்) வரை சேமிக்கலாம். நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்து உங்களுக்கான வட்டிவிகிதம் மாறுபடும்.
காலத்தை பொறுத்து உங்களுக்கு எவ்வளவு வட்டிவிகிதங்கள் கிடைக்கும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம்:
காலம் | General Citizen | Senior Citizen |
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை | 4.00 % | 4.00 % |
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை | 5.25 % | 5.25 % |
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை | 5.50 % | 5.50 % |
180 நாட்கள் வரை 269 நாட்கள் வரை | 6.15 % | 6.65 % |
270 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள்ளாக | 6.25 % | 6.75 % |
1 வருடம் | 6.85 % | 7.35 % |
444 நாட்கள் | 7.25 % | 7.75 % |
1 வருடம் முதல் 2 வருடத்திற்குள்ளாக | 6.85 % | 7.35 % |
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள்ளாக | 6.85 % | 7.35 % |
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள்ளாக | 6.80 % | 7.30 % |
5 வருடம் முதல் 10 வருடம் வரை | 6.70 % | 7.20 % |
Canara பேங்கில் 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி நீங்கள் 1 லட்சம் ரூபாயை இந்த FD திட்டத்தில் 10 வருடங்களுக்கு சேமித்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்று பார்க்கலாம்.
இப்பொழுது நீங்கள் ஒரு General Citizen-க இருந்து 1 லட்சம் ரூபாயை 10 வருட கால அளவை தேர்வு செய்து முதலீடு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு மொத்த வட்டி தொகையாக 94,342 ரூபாய் அளிக்கப்படுகிறது. எனவே, 10 வருட முடிவில் வட்டியுடன் சேர்த்து 1,94,342 ரூபாய் கிடைக்கும்.
அதுவே நீங்கள் Senior Citizen-க இருந்து 1 லட்சம் ரூபாயை 10 வருட கால அளவை தேர்வு செய்து முதலீடு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு மொத்த வட்டி தொகையாக 1,04,132 ரூபாய் அளிக்கப்படுகிறது. எனவே, 10 வருட முடிவில் வட்டியுடன் சேர்த்து 2,04,132 ரூபாய் கிடைக்கும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |