ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

Advertisement

கனரா வங்கி பிக்சட் டெபாசிட் ஸ்கீம் | Canara Bank Fixed Deposit Schemes in Tamil

கனரா வங்கி இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு நகரைத் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. பொதுத்துறை வங்கியான கனரா வங்கி தற்போது நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையில், இந்த வட்டி விகித உயர்வானது கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகளில் முடிவடையும் டெபாசிட்டுகளுக்கு 4 சதவிகிதம் முதல் 7.25 சதவிகிதம் வரையிலும் வட்டி விகிதம் கிடைக்கும் என்றும், மூத்த குடிமக்களுக்கு 4 சதவிகிதம் முதல் 7.75 சதவிகிதம் வரையிலும் வட்டி விகிதம் கிடைக்கும் என கனரா வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சரி இந்த கனரா வங்கி பிக்சட் டெபாசிட் ஸ்கீமில் ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி பெறுவது எப்படி என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl

எவ்வளவு வட்டி வாங்கப்படுகிறது?

முதிர்வு காலம் பொது குடிமக்களுக்கான வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம்
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை 4.00% 4.00%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை 5.25% 5.25%
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை 5.50% 5.50%
180 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை 6.25% 6.75%
270 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது 6.50% 7.00%
1 வருடம் மட்டும் 7.00% 7.50%
444 நாட்கள் 7.25% 7.75%
1 வருடத்திற்கு மேல் முதல் 2 வருடங்களுக்கும் குறைவானது 6.90% 7.40%
2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவானவர்கள் 6.85% 7.35%
3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதல் 5 வருடங்களுக்கும் குறைவானவர்கள் 6.80% 7.30%
5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதல் 10 ஆண்டுகள் வரை 6.70% 7.20%

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதந்தோறும் 2627 ரூபாய் செலுத்தினால் 12,12,500 ரூபாய் வருமானம் கிடைக்கும் LIC-யின் திட்டம்..

Canara Bank Fixed Deposit Schemes Details:

இந்த பிக்சட் டெபாசிட் ஸ்கீமில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்து கணக்கை ஓபன் செய்யலாம்.

அதுவே அதிகபட்சம் என்று பார்க்கும் போது 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தின் டெபாசிட் காலம் என்பது 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை உள்ளது.

இந்த திட்டத்தில் Loan Facility, Nomination Facility போன்ற வசதிகள் உள்ளது.

மேலும் இந்த கனரா வங்கி பிக்சட் டெபாசிட் ஸ்கீமில் 0.50% கூடுதலாக கிடைக்கின்றது.

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

ஒரு வருடத்திற்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது குறித்து இப்பொழுது நாம் பார்க்கலாம்.

டெபாசிட் தொகை பொது குடிமக்கள் மூத்த குடிமக்கள்
10,000 718 771
50,000 3,592 3,856
1,00,000 7,185 7,713
2,00,000 14,371 15,427
5,00,000 35,929 38,567
10,00,000 71,859 77,135

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
666 நாட்களில் Rs.5,51,110/- பெறும் திட்டம்..! அது என்ன தெரியுமா..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement