கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?

Advertisement

Canara Bank Home Loan 5 Lakh EMI Calculator in Tamil

இன்றைய காலகட்டத்தில் உள்ள சூழ்நிலையை பொறுத்தவரை நமக்கு ஏதாவது பண தேவையோ அல்லது வேறு ஏதேனும் தேவைகள் இருந்தால் அதற்காக மற்றவரை எதிர்பார்த்து வாழ்வது இல்லை. ஏனென்றால் வங்கி அல்லது நிதிநிறுவனங்களில் தனக்கு தேவையான பணத்தை அவர் அவருடைய பெயரில் வாங்கி கொள்கின்றனர். நாம் கடன் பெரும் வகைகளில் வீட்டுக் கடனும் ஒன்று தான். இதுமாதிரி நாம் வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன்பு அந்த வங்கியின் வட்டி விகிதம், மாத தவணை மற்றும் கடன் தொகை போன்றவற்றை எல்லாம் கவனிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் இன்று கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் செலுத்த வேண்டிய வட்டி, மாத தவணை மற்றும் இதர விவரங்கள் பற்றி விரிவாக இன்றைய Banking பதிவில் தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

வீட்டுக் கடன் என்றால் என்ன..?

 ஒரு சொத்தை நாம் அடமானாக வைத்து அதன் அடிப்படையில் குறிப்பிட்ட தொகையினை பெற்று கொள்ளும் முறையே வீட்டுக் கடன் எனப்படும். 

இத்தகைய வீட்டுக் கடன் முறையில் சொத்தின் மதிப்பிற்கு ஏற்றவாறு கடன் தொகையினை கூடவோ அல்லது குறைவாகவோ பெற்று கொள்ளலாம். கடன் பெற்ற தொகையினை மாதந்தோறும் EMI முறையில் செலுத்தி கடனை அடைத்து கொள்ளலாம்.

Canara Bank House Loan:

கனரா வங்கியில் வீட்டுக்கடன் பெறுவோருக்கான வட்டி விகிதமானது தோராயமாக 8.40%முதல் 11.25% வரை அளிக்கப்படுகிறது.

5 லட்சம் கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

எடுத்துக்காட்டாக, 

வீட்டுக் கடன் பெற்ற தொகை  5 லட்சம் 
வட்டி விகிதம்  9%
கடன் காலம்  5 வருடம் 
மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை  10,379 ரூபாய் 
மொத்த வட்டி தொகை  1,22,751 ரூபாய் 
செலுத்த வேண்டிய மொத்த தொகை  6,22,751 ரூபாய் 

குறிப்பு: மேலே கூறப்பட்டுள்ள கடன் தொகை, வட்டி விகிதம் மற்றும் EMI ஆகியவை தோராயமாக கூறப்பட்டது ஆகும். நீங்கள் வாங்கும் தொகை மற்றும் வட்டி மாறுதலை பொறுத்து அனைத்தும் மாறுபடும். 

தொடர்புடைய பதிவுகள்👇
கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement