Canara Bank Home Loan 6 Lakh EMI Calculator in Tamil
பொதுவாக அனைவருக்குமே பணத்தேவை என்பது சிறியதாகவோ அல்லது அதிகமாகவோ உள்ளது. அதனால் அதனை பூர்த்தி செய்வதற்காக நாம் யாரிடமும் சென்று பணம் கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் நமது பணத்தேவை பூர்த்தி செய்வதற்காகவே வங்கிகள் பல வகையான கடன்களை அளிக்கின்றன. அப்படி வங்கிகளால் அளிக்கப்படும் பல வகையான கடன்களில் ஒன்று தான் வீட்டு கடன். உங்களின் பணத்தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒரு வங்கியில் வீட்டு கடன் வாங்க இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு முன்னால் அதற்கான வட்டி விகிதம், மாத தவணை மற்றும் கடன் தொகை போன்றவற்றை எல்லாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதனால் இன்றைய பதிவில் கனரா வங்கியில் 6 லட்சம் வீட்டு கடன் பெற்றால் செலுத்த வேண்டிய வட்டி, மாத தவணை போன்ற விவரங்கள் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம் வாங்க..!
வீட்டுக் கடன் என்றால் என்ன..?
இப்பொழுது நீங்கள் ஏதாவது ஒரு வங்கியில் வீட்டு கடன் வாங்க இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு முதலில் உங்களிடம் உள்ள ஏதாவது ஒரு சொத்தையோ அல்லது விலை உயர்ந்த பொருட்களையோ வங்கியில் அடமானாக வைத்து அதன் அடிப்படையில் குறிப்பிட்ட தொகையினை கடனாக பெற்று கொள்ள முடியும். கடன் பெற்ற தொகையினை மாதந்தோறும் EMI முறையில் செலுத்தி கடனை அடைத்து கொள்ளலாம்.
Canara Bank House Loan in Tamil:
கனரா வங்கியில் வீட்டு கடன் பெறுவோருக்கான வட்டி விகிதமானது தோராயமாக 9.30%-லிருந்து அளிக்கப்படுகிறது.
6 லட்சம் கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:
வீட்டுக் கடன் பெற்ற தொகை | 6 லட்சம் |
வட்டி விகிதம் | 9.30% |
கடன் காலம் | குறைந்தபட்சம் 10 வருடம் |
மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகை | 7,698 ரூபாய் |
மொத்த வட்டி தொகை | 3,23,796 ரூபாய் |
செலுத்த வேண்டிய மொத்த தொகை | 9,23,796 ரூபாய் |
மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |