கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

canara bank home loan details in tamil

Canara Bank Home Loan

இன்றைய காலத்தை பொறுத்த வரை அனைவரும் வங்கி அல்லது நிதி நிறுவங்களில் நமக்கு தேவையான கடனை பெறுகிறோம். அப்படி கடன் பெறுவது என்பது பல விதிமுறைகளின் அடிப்படையில் தான் நடக்கிறது. இதில் கடன் பெரும் வகைகள் நிறைய இருந்தாலும் கூட நூற்றில் 90% மக்கள் வீட்டு கடனை தான் அதிக வாங்குகின்றனர். இத்தகைய முறையில் கடன் வாங்கினாலும் கூட 10% மக்களுக்கு வீட்டு கடன் வாங்குவதற்கு என்ன தகுதி வேண்டும் மற்றும் அதற்கு என்ன ஆவணம் வேண்டும் என்ற அடிப்படை தகவலை தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் இன்று கனரா வங்கியில் வீட்டு கடன் பெறுவதற்கு என்ன தகுதி மற்றும் ஆவணங்கள் வேண்டும் என்பதை விரிவாக தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாருங்கள்.

Canara Bank Documents Required For Home Loan:

கனரா வங்கியில் மாதந்தோறும் சம்பளம் வாங்குபவர் மற்றும் தொழில் புரிபவர் யார் வேண்டுமானாலும் வீட்டு கடன் வாங்கி கொள்ளும் வசதி உள்ளது.

  • சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்ட கடன் பெறுவதற்கான விண்ணப்பம்.
  • வாக்காளர் அட்டை
  • ஆதார் அட்டை
  • பான் கார்டு
  • ஓட்டுநர் உரிமம்
  • Pass Port Size Photo- 3
  • இருப்பிட சான்றிதழ்
  • மின்வாரி பில்
  • தொலைபேசி பில்
  • சமீபத்திய 6 மாதத்திற்கான வங்கி கணக்கு புத்தகத்தின் நகல்

மேலே சொல்லப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் சம்பளம் பெறுபவர் மற்றும் தொழில்புரிபவர் இரண்டு நபர்களுக்கும் அடங்கும்.

மாத சம்பளம் பெறுபவறுக்கான தனிநபர் அடையாளம்:

  1. கடந்த 2 வருடத்திற்கான மாத சம்பளச் சீட்டு (Pay Slip)
  2. சொத்து வரி ரசீது
  3. வேறு ஏதேனும் சொத்துக்கள் இருந்தால் அதற்கான விவரம்

தொழில் செய்வோருக்கான தனிநபர் அடையாளம்:

  1. கடந்து 3 வருடத்திற்கு தொழில் செய்ததிற்கான IT 
  2. சொத்து வரி ரசீது
  3. வேறு ஏதேனும் சொத்துக்கள் இருந்தால் அதற்கான விவரம்

இதையும் படியுங்கள்⇒ SBI -இல் வீட்டு லோன் பெறுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை..!ICICI வங்கியில் வீட்டு லோன் பெறு

Canara Bank Home Loan Eligibility:

  • விண்ணப்பிக்கும் நபர் இந்திய குடியுரிமை பெற்றவராக இருத்தல் அவசியம்.
  • குறைந்த பட்ச மாத சம்பளம் ரூபாய் 25,000 இருக்க வேண்டும்.
  • குறைந்த பட்ச வயது 21-ற்கு மேல் அதிகப்பட்ச வயது 60-ற்குள் இருக்க வேண்டும்.
  • வட்டி விகிதமானது 8.35% முதல் 8.55% வரை இருக்கும்.
  • கடனை திரும்ப செலுத்துவதற்கான காலம் 30 வருடம் ஆகும்.
ICICI வங்கியில் வீட்டு லோன் பெறுவதற்கு தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking