Personal Loan 1 Lakh EMI
கனரா வங்கி 1906 ஆம் ஆண்டு அம்மேம்பாள் சுப்பா ராவ் பாய் என்பவரால் மங்களூரில் நிறுவப்பட்டது. அதன் பிறகு, இவ்வங்கி 1969 ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்டது. இது பெங்களூரில் உள்ள இந்திய பொதுத்துறை வங்கி ஆகும். இவ்வங்கி பொதுமக்களுக்கு பலவிதமான லோன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் கனரா வங்கியில் வழங்கப்படும் தனிநபர் கடன் பற்றிய சில விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக கனரா வங்கியில் 1 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் 1 வருடத்திற்கு எவ்வளவு வட்டி செலுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Canara Bank Personal Loan 1 Lakh in Tamil:
கடன் தொகை:
கனரா வங்கியில் அதிகபட்சம் 10 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கப்படுகிறது.
கால அளவு:
கனரா வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் அதிகப்பட்சம் 5 வருடத்திற்குள் செலுத்தி முடிக்க வேண்டும்.
வட்டி விகிதம்:
கனரா வங்கியில் தனிநபர் கடனுக்கு 11.75% முதல் 16.25% வரை வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
1 லட்சம் பெற்றால் 1 வருடத்திற்கு எவ்வளவு வட்டி கட்ட வேண்டும்.?
கனரா வங்கியில் நீங்கள் ஒரு லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI -ஆக 8,873 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும், ஒரு வருடத்திற்கு மொத்த வட்டியாக 6,478 ரூபாய் செலுத்த வேண்டும்.
எனவே, நீங்கள் வாங்கிய 1 லட்சத்திற்கு வட்டி மற்றும் EMI தொகை சேர்த்து 1,06,478 ரூபாய் செலுத்த வேண்டும்.
SBI வங்கியில் 3.5 லட்சம் தொழில்கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு.?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |