Canara Bank Personal Loan Details in Tamil | கனரா வங்கி தனிநபர் கடன்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கனரா வங்கியில் நீங்கள் தனிநபர் கடன் பெற்றால் அதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும், என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் இதுபோன்ற விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வங்கி என்பது பலவகையான திட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறது. இப்படிப்பட்ட வங்கியில் தான் நமக்கு தேவையான ஒரு சில உதவிகளை பெறுகிறோம். கனரா வங்கி பலவிதமான லோன்களை வழங்கி வருகிறது. அவற்றில் பெரும்பாலும் அனைவராலும் பயன்படுத்தப்படுவது தனிநபர் கடன் தான். ஆகையால், Canara Bank Personal Loan Details in Tamil நாம் அனைவருமே தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
அது எந்த மாதிரியான உதவி என்றால் கடன் பெறுவது தான். அரசு வங்கி அல்லது தனியார் வங்கி இரண்டில் எதுவாக இருந்தாலும் நமக்கு தேவையான கடன் தொகையினை சில விதிமுறைகளுக்கு உட்பட்டு பெற்றுக்கொள்கிறோம். அத்தகைய முறையில் தனிநபர் கடனும் ஒன்றாகும். ஆனால் இத்தகைய தனிநபர் கடனை பெறுவதற்கு என்னென்ன ஆவணங்கள் மற்றும் தகுதிகள் தேவை என்று கூட சிலருக்கு தெரியவில்லை. ஆகவே கனரா வங்கியில் தனிநபர் கடன் பெறுவதற்கான தகுதி மற்றும் ஆவணங்கள் பற்றி தெரிந்துகொள்ளவோம் வாங்க..!
Canara Bank Personal Loan Eligibility:
- கனரா வங்கியில் தொழில் புரிபவர் மற்றும் மாதாந்திர அடைப்படையில் சம்பளம் பெறுபவர் இரண்டு வகையான நபர்களும் பெற்றுகொள்ளலாம்.
- இத்தகைய கடனை பெற விரும்பும் நபருக்கு வயது 21 முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- மாதாந்திர அடைப்பு அடிப்படையில் வேலை செய்பவர் 2 வருடமும் மற்றும் தொழில்புரிபவர் 3 வருடமும் வேலை பார்த்து இருக்க வேண்டும். மேலும் மாதந்தோறும் தோராயமாக 15,000 ரூபாய் வருமானம் பெற வேண்டும்.
- அதுமட்டும் இல்லாமல் குறைந்தது 1 வருடமாவது அந்த வேலையில் நிலையாக இருந்து வேலை செய்ய வேண்டும்.
- நீங்கல் கனரா வங்கியில் கடன் பெற்றால் அதனையுடைய வட்டி விகிதம் என்பது தோராயமாக 10.70% முதல் 16.40% வரை ஆகும்.
- அதிகபட்சம் 10 லட்சம் வரை தனிநபர் கடன் பெற்று கொள்ளலாம்.
- சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை உடனடி தனிநபர் கடன் கிடைக்கும்.
Canara Bank Personal Loan Documents Required:
- ஆதார் அட்டை
- வாக்காளர் அட்டை
- ஓட்டுநர் உரிமம் அட்டை
- பான் கார்டு
- குடும்ப அட்டை
- PassPort Size Photo- 3
- வருமான வரி சான்றிதழ்
- தொலைசிப்பேசி பில்
- வேறு ஏதேனும் சொத்துக்கள் இருந்தால் அதற்கான விவரம்
மேலும் கட்டாயமாக உங்களுடைய சிபில் மதிப்பெண்ணானது 750 இருக்க வேண்டும்.
மாதாந்திர வருமானம் பெறுபவருக்கான தகுதி:
- வங்கி கணக்கு புத்தகம்
- 3 மாத சம்பளச் சீட்டு (Pay Slip)
- 3 மாத வங்கி கணக்கு அறிக்கை (Salary Slip)
- அடையாள அட்டை
தொழில்புரிபவர் தகுதி:
- IT பதிவு செய்த படிவம்- 2 வருடம்
- வங்கி கணக்கு புத்தகம்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |