கனரா வங்கியில் மாதம் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்..?

Advertisement

Canara Bank Rd 1000 Per Month in Tamil

நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து சேமிப்பு என்பது நம்மிடம் உள்ள ஒரு சிறந்த பண்பாகும். அதாவது நமது முன்னோர்களின் காலகட்டத்தில் சேமிப்பு என்றால் அது அவர்கள் விளைவிக்கும் உணவு பொருட்கள் மற்றும் சில பொருட்களை சேமித்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்றால் பணத்தை தான் சேமிக்க வேண்டும். ஏனென்றால் இன்றைய சூழலை பொறுத்த வரையில் நமிடம் பண இருந்தாலே போதும் மற்ற எல்லாமே நம்மிடம் தானாக வந்துவிடும் என்ற சூழல் தான் இங்கு நிலவுகின்றது. அதனால் தான் நாம் அனைவருமே தங்களது எதிர்கால தேவைக்காக சேமிக்க நினைக்கின்றோம். ஆனால் ஒரு சிலருக்கு சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான். இன்றைய பதிவில் கனரா வங்கியின் RD சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Canara Bank 5 Year RD Details in Tamil:

Canara Bank 5 Year RD Details in Tamil

சேமிப்பு தொகை:

நீங்கள் இந்த கனரா வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமென்றாலும் சேமிக்கலாம்.

சேமிப்பு காலம்:

இந்த திட்டத்தில் நீங்கள் 1 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை சேமிக்கலாம்.

வட்டி விகிதம்:

கனரா வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 6.70% முதல் 7.40% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. இந்த வட்டிவிகிதமானது நீங்கள் சேமிக்கும் தொகையினை பொருத்தும், நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்தும் மாறுபடும்.

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 2 லட்சம் கடனாக பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு

உதாரணமாக,

ஜென்ரல் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?

ஜென்ரல் சிட்டிசன் 5 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 1000 ரூபாய்  டெபாசிட் செய்து வந்தால் 5 வருடத்தில் நீங்கள் மொத்தமாக 60,000 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள். 

மேலும், உங்களுக்கான வட்டித்தொகையாக 11,369 ரூபாய் கிடைக்கும். எனவே  நீங்கள் 5 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 71,369 ரூபாயினை பெறுவீர்கள்.

சீனியர் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?

ஜென்ரல் சிட்டிசன் 5 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 1000 ரூபாய்  டெபாசிட் செய்து வந்தால் 5 வருடத்தில் நீங்கள் மொத்தமாக 60,000 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள்.

மேலும், உங்களுக்கான வட்டித்தொகையாக 12,311 ரூபாய் கிடைக்கும். எனவே  நீங்கள் 5 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 72,311 ரூபாயினை பெறுவீர்கள்.

கனரா வங்கியில் மாதம் 500 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்

வங்கியில் தங்க நகையை வைத்து 1.5 லட்சம் கடனாக பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement