Canara Bank Rd 500 Per Month in Tamil
வணக்கம் நண்பர்களே.! இந்தியாவின் உள்ள வங்கிகளில் மிகவும் பிரபலமான வங்கிகளில் ஒன்றாக திகழும் கனரா வங்கியில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் மற்றும் கடன்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கனரா வங்கியில் வழங்கப்படும் RD சேமிப்பு திட்டத்தை பற்றிய விவரங்களை பின்வருமாறு விரிவாக காணலாம் வாங்க. பொதுவாக நாம் ஒரு வங்கிகயில் கடன் வாங்குவதற்கு முன்போ அல்லது சேமிப்பு திட்டத்தில் தொடங்குவதற்கு முன்பு அதனை பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்வது மிக மிக அவசியம். அந்த வகையில் நீங்கள் கனரா வங்கியில் மாதம் 500 ரூபாய் டெபாசிட் செய்து வருகிறீர்கள் என்றால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை வழங்கப்படும்.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
Canara Bank 5 Year RD Interest Rate in Tamil:
சேமிப்பு தொகை:
நீங்கள் இந்த கனரா வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமென்றாலும் சேமிக்கலாம்.
சேமிப்பு காலம்:
இந்த திட்டத்தில் நீங்கள் 6 மாதம் முதல் அதிகபட்சம் 10 வருடம் வரை சேமிக்கலாம்.
வட்டி விகிதம்:
கனரா வங்கியின் RD சேமிப்பு திட்டத்தில் உங்களுக்கு தோராயமாக 6.90% முதல் 7.20% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. இந்த வட்டிவிகிதமானது நீங்கள் சேமிக்கும் தொகையினை பொருத்தும், நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்தும் மாறுபடும்.
ஜென்ரல் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?
ஜென்ரல் சிட்டிசன் 5 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 500 ரூபாய் டெபாசிட் செய்து வந்தீர்கள் என்றால் உங்களுக்கு 6.70% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
5 வருடத்தில் நீங்கள் மொத்தமாக 30,000 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள்.
மேலும், உங்களுக்கான வட்டித்தொகையாக 5,681 ரூபாய் கிடைக்கும். எனவே நீங்கள் 5 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 35,681 ரூபாயினை பெறுவீர்கள்.
சீனியர் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?
ஜென்ரல் சிட்டிசன் 5 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 500 ரூபாய் டெபாசிட் செய்து வந்தீர்கள் என்றால் உங்களுக்கு 7.20% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
வந்தால் 5 வருடத்தில் நீங்கள் மொத்தமாக 30,000 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள்.
மேலும், உங்களுக்கான வட்டித்தொகையாக 6,155 ரூபாய் கிடைக்கும். எனவே நீங்கள் 5 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 36,155 ரூபாயினை பெறுவீர்கள்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |