Canara Bank RD Interest Rates April 2023
ஒவ்வொருவருமே தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையினை வங்கியிலோ அல்லது போஸ்ட் ஆபீஸிலோ சேமித்து வைக்க தொடங்குகின்றனர். அவ்வாறு நாம் சேமிக்கும் பணத்திற்கு எவ்வளவு வட்டி என்பதை அனைவரும் தெரிந்துகொள்வது அவசியம். ஏனென்றால் வருடத்திற்கு ஒருமுறை வட்டி விகிதங்கள் மாறிக்கொண்டு இருக்கும். எனவே அதற்கேற்றாற்போல் சேமிப்பது தான் சிறந்தது. எனவே, அந்த வகையில் கனரா வங்கியில் RD திட்டத்தில் நீங்கள் சேமிப்பை தொடங்க விரும்பினாலோ அல்லது ஏற்கனவே சேமிப்பை தொடங்கி இருந்தாலோ அதற்கான வட்டி விகிதங்கள் மற்றும் எவ்வளவு லாபம் போன்ற விவரங்களை அறிந்துகொள்வதற்கு இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Canara Bank RD Interest Rates 2023 in Tamil:
RD கால அளவு | வட்டி விகிதம் | |
General citizen | Senior citizen | |
180 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை | 6.25% | 6.75% |
270 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவாக | 6.50% | 7.00% |
1 ஆண்டு | 7.00% | 7.50% |
444 நாட்கள் | 7.25% | 7.75% |
1 வருடத்திற்கு மேல் 2 வருடங்களுக்கும் குறைவாக | 6.90% | 7.40% |
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை | 6.85% | 7.35% |
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை | 6.80% | 7.30% |
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை | 6.70% | 7.20% |
Canara Bank RD Minimum Amount in Tamil:
இத்திட்டத்தில் நீங்கள் 180 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையில் உள்ள கால அளவுகளை தேர்வு செய்து சேமிக்க தொடங்கலாம். அதுமட்டுமில்லாமல் இத்திட்டத்தில் நீங்கள் மாதம் மாதம் குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் சேமிக்க தொடங்கலாம்.
மாதம் 2,000 ரூபாய் சேமித்தால் 3,15,738 ரூபாய் வரை கிடைக்கும் திட்டம்..!
உதாரணமாக, கனரா வங்கியின் RD திட்டத்தில் மாதம் மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.?
கால அளவு | முதலீடு தொகை |
General citizen | Senior citizen | |||
வட்டி தொகை | மொத்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை | |||
5 வருடம் | 1000 ரூபாய் | 11,365 ரூபாய் | 71,365 ரூபாய் | 12,313 ரூபாய் | 72,313 ரூபாய் |
55,513 ரூபாய் வட்டி மட்டுமே அளிக்கக்கூடிய பிக்சட் டெபாசிட் திட்டம் பற்றி தெரியுமா..?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |