சென்ட்ரல் வங்கியில் அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..!

CBI Fixed Deposit Scheme Tamil 2023

729 நாட்களில் வட்டியாக Rs.77,269/- கிடைக்கும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா சேமிப்பு திட்டம் | CBI Fixed Deposit Scheme Tamil 2023

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மார்ச் 10 தேதியில் இருந்து Fixed Deposit Scheme-கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. ஆக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா Fixed Deposit Scheme-கான வட்டி விகிதத்தை எவ்வளவு அதிகரித்துள்ளது என்பது குறித்து தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம்.

இந்த சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் Fixed Deposit Account-ஐ ஓபன் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து அதிகபட்சம் நீங்கள் எவ்வளவு டெபாசிட் செய்யமுடியுமோ அவ்வளவு ரூபாயை டெபாசிட் செய்துகொள்ளலாம். நீங்கள் இந்த சேமிப்பு திட்டத்தில் எவ்வளவு தொகை முதலீடு செய்கிறீர்களோ அந்த தொகையை பொறுத்து உங்களுக்கு வட்டி வழங்கப்படும். 18 வயது பூர்த்தியான அனைத்து இந்தியர்களுமே இந்த சேமிப்பு திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். சரி வாங்க இதற்கான வட்டி விகிதத்தை இப்பொழுது பார்க்கலாம்.

CBI FD Rate New Update 2023:CBI Fixed Deposit Scheme

நாட்கள் 60 வயதுக்கு குறைவனானவர்கள் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள்
7 to 14 நாட்களுக்கு 4% 4.50%
15 to 45 நாட்களுக்கு 4.25% 4.75%
46 to 80 நாட்களுக்கு  4.50% 5 %
91 to 179 நாட்களுக்கு  5 % 5.50%
180 to 364 நாட்களுக்கு  5.50% 6%
1 to  2 ஆண்டுகளுக்கு 6.75% 7.25%
2 to 3 ஆண்டுகளுக்கு 6.50% 7%
3 to 10 ஆண்டுகளுக்கு 6.25% 6.50%

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2023-ல் ICICI வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று தெரியுமா.?

உதாரணம்:

1 லட்சம் ரூபாயில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் இரண்டு வருட Fixed Deposit Scheme-யில் டெபாசிட் செய்தீர்கள் என்றால் அதற்கு எவ்வளவு லாபம் கிளைக்கும் என்று பார்க்கலாம்.

முதலீட்டு தொகை Normal Citizen Senior Citizen
வட்டி மொத்த தொகை வட்டி  மொத்த தொகை
1,00,000/- 14,324/- 1,14,324/- 15,453/- 1,15,453/-
5,00,000/- 71,624/- 5,71,624/- 77,269/- 5,77,269/-

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking