444 நாட்களில் ரூபாய் 59,737/- தரும் சிறந்த சேமிப்பு திட்டம்..!

CBI Special FD Scheme Tamil

444 நாட்களில் ரூபாய் 59,737/- தரும் சிறந்த சேமிப்பு திட்டம்..! CBI Special FD Scheme Tamil..!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா பொது மக்களுக்கு 444 நாட்கள், 555 நாட்கள், 999 நாட்கள் என்று மூன்று விதமான கால அளவில் Special Fixed Deposit Scheme-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த Special Fixed Deposit Scheme-யில் நீங்கள் குறைந்தபட்ச தொகையாக 10,000/- ரூபாயை டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக நீங்கள் 10 கோடி வரை டெபாசிட் செய்யலாம். வந்த ஸ்கீமில் நீங்கள் சேர விரும்புகிறீர்கள் என்றால் சென்ட்ரல் பேங்கிற்கு நேரடியாக சென்று இணையலாம், அல்லது Online Banking, Net Banking, Mobile Banking போன்றவற்றின் மூலமாக இணையலாம். சரி வாங்க இந்த சேமிப்பு திட்டம் குறித்த மேலும் சில தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.

வட்டி:

நாட்கள் General Public Senior Citizen
444 நாட்களுக்கு  7.35% 7.85%
555 நாட்களுக்கு  7% 7.50%
999 நாட்களுக்கு  6.50% 7%

 

இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 0.50% வட்டி கூடுதலாக கிடைக்குறது.

அதுவே நீங்கள் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் ஊழியராக இருந்தால் உங்களுக்கு 1% வட்டி கூடுதலாக வழங்கப்படும்.

அதேபோல் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் ஊழியராக இந்து நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்தால் உங்களுக்கு 1.50% வட்டி கூடுதலாக கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சென்ட்ரல் வங்கியில் அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..!

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? – CBI Special FD Scheme Tamil

முதலீட்டு தொகை Normal Citizen Senior Citizen Staff Senior Citizen
வட்டி மொத்த தொகை வட்டி மொத்த தொகை வட்டி மொத்த தொகை
444 நாட்களுக்கு 
5,00,000/- 46,508/- 5,46,508/- 49,792/- 5,49,792/- 59,737/- 5,59,737/-
555 நாட்களுக்கு
5,00,000/- 55,808/- 5,55,808/- 59,987/- 5,59,987/- 72,680/- 5,72,680/-
999 நாட்களுக்கு
5,00,000/- 96,523/- 5,96,523/- 1,04,606/- 6,04,606/- 1,29,454/- 6,29,454/-

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2023-ல் ICICI வங்கியில் 7 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று தெரியுமா.?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
SHARE