சிபில் ஸ்கோர் பார்ப்பது எப்படி? | CIBIL Report Download Online Tamil
பொதுநலம்.காம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.. பொதுவாக வங்கிகளில் கடன்பெறுவதற்கு கண்டிப்பாக நமக்கு சிபில் ரிப்போர்ட் தேவைப்படும். இதனை ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்யலாம் என்பதை பற்றி அறியலாம். ஒரு தனிநபரின் சிபில் ஸ்கோர் என்பது முந்தைய கடன்கள் மற்றும் திருப்பிச் செலுத்துதல்கள் மற்றும் இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களின் கிரெடிட் கார்டு தகவல் போன்ற பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த சிபில் ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும். இந்த ஆன்லைனில் சிபில் ஸ்கோர் ரிப்போர்ட் டவுன்லோட் செய்வது எப்படி? என்று நிறைய கேள்விகள் மக்களிடம் இருக்கிறது. இன்றைய பதிவில் தெரிந்துகொள்வோம் வாங்க.
சிபில் ஸ்கோர் – எவ்வளவு அதிகம்? எவ்வளவு குறைவு?
- 600க்கு கீழே : மிகவும் குறைவு
- 600 – 649 : குறைவு
- 650 – 699 : பரவாயில்லை
- 700 – 749 : நல்ல ஸ்கோர்
- 750 – 900 : மிகவும் நல்ல ஸ்கோர்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
ஆன்லைனில் சிபில் ஸ்கோர் ரிப்போர்ட் டவுன்லோட் செய்வது எப்படி? | CIBIL Report Download Online Tamil
ஸ்டேப்: 1
முதலில் உங்கள் Google Chrome-யில் SBI Home Loans என்று Search செய்யுங்கள்.
ஸ்டேப்: 2
பிறகு Homeloans.sbi என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 3
இப்பொழுது SBI-யின் Home Loans பேஜ் திறக்கப்படும். அதில் Get your Free CIBIL Score என்று இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப்: 4
பிறகு மேல் படத்தில் காட்டப்பட்டுள்ள போல் ஒரு பக்கம் திறக்கப்படும் அதில் உங்களுக்கு ஒரு Application கொடுக்கப்படும். ஆக அந்த Applications-ஐ சரியாக பூர்த்தி செய்து Submit என்ற பட்டனை கிளிக் செய்தீர்கள் உங்களுடைய சிபில் ஸ்கோர் காட்டப்படும் அதனை நீங்கள் எளிதாக டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
SBI வங்கியில் கார் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், தகுதிகள் பற்றி தெரியுமா.?
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |