எந்த காரணத்தால் சிபில் ஸ்கோர் குறைகிறது தெரியுமா..?

Advertisement

சிபில் ஸ்கோர் குறைவது ஏன் | Cibil Score Low Reasons in Tamil

சிபில் ஸ்கோர் தான் நமக்கு கடன் வழங்கலாமா என்று தீர்மானிக்க வழி செய்கிறது.  அதேபோல் சிலருக்கு இந்த ஸ்கோர் குறைவதை வைத்து கடன் வழங்காமல் இருக்க பெரிய தடைகளாகவும் உதவி செய்கிறது. அதேபோல் இந்த சிபில் ஸ்கோர் உயர்த்துவது எப்படி, அதேபோல் எதனால் இந்த சிபில் ஸ்கோர் குறைகிறது என்றும் தெரிந்து கொள்ளுங்கள்..!  தெரிந்து கொண்ட பின் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை சொல்லி அவர்களுக்கும் உதவி செய்யுங்கள்..!

Cibil Score Low Reasons in Tamil:

சிபில் ஸ்கோர் என்பதை இந்தியாவில் நிதி நிறுவனங்கள் பயன்படுத்தப்படும்  கிரெடிட் ஸ்கோர் ஆகும். கடன் வழங்க கடனாளர்களை தீர்மானிக்க இந்த எண்ணிக்கை உதவி செய்யும்.

இந்த  சிபில் ஸ்கோரானது 300 முதல் 900 வரை இருக்கும். இதனுடைய மதிப்பு 750 -க்கு மேல் இருந்தால் நன்றாக உள்ளது என்று கருதப்படுகிறது. 650 -க்கு குறைவான மதிப்பாக இருந்தால் குறைவானது என்றும் கருதப்படுகிறது. சரி எதனால் சிபில் ஸ்கோர் குறைகிறது. அதற்கான 5 காரணங்களை இப்போது படித்து தெரிந்து கொள்வோம்..!

சிபில் ஸ்கோரை உயர்த்துவது எப்படி.?

Irregular Payments: 

அதாவது நீங்கள் நிதி நிறுவனத்தில் வாங்கும் கடனை சரியான நேரத்தில் கட்ட தவறினால் அல்லது உங்களின் தேதியை தவறவிட்டு அதன் பின் கட்டினால், அதற்கான வட்டி அபராதம் சேர்த்து கட்டினால் உங்களின் சிபில் மதிப்பு குறையும்.

Late Bill Payment:

அதாவது நீங்கள் கடன் வாங்குவதை தவிர நாம் சில தவறுகள் செய்கிறோம். அதாவது மாத தவணையாக வாகனம் வாங்குவது, அதேபோல் போன் வாங்குவது என்று சில பொருட்களை வாங்குவார்கள். அவர்களுக்கு சரியான முறையில் பணம் கட்டினாலும் உங்களின் கணக்கிலிருந்து பணத்தை எடுக்காமலும் அல்லது லேட் Payment என்று சொல்வார்கள். ஆகவே அதனை சரியாக கவனித்து உங்களின் பில்களை பார்த்து கொள்வது நல்லது.

No Credit History:

முதலில் கிரெடிட் பெறுவதற்கு முக்கியமாக உங்களிடம் முன்பு கடன் வாங்கிய ஆதாரம் இருக்கவேண்டும். ஆதாரம் என்றால் உங்களின் வங்கியில் இருக்கக்கூடிய சேவை ஆகும். அதேபோல் நீங்கள் இப்போது தான் சிபில் ஸ்கோர் ஏற்ற ஆரம்பித்து கடன் வாங்கி இருக்கிறீர்கள் என்றால் உங்களின் சிபில் ஸ்கோர் குறைவாக இருக்க முக்கிய காரணமாக இருக்கும். அதனை உயர்த்த முதலில் கடன் வாங்கி அதனை சரியான முறையில் கட்டினால் மிகவும் நல்லது. உங்களின் சிபில் ஸ்கோர் ஏறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

சிபில் ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும்

சரியான கடன் நிறுவனம்:

உங்கள் கிரெடிட் கார்டுகளில் அல்லது தனிநபர் கடன்களின் வடிவத்தில் குறிப்பிட்ட கடன் பாதுகாப்பு இருப்பது நல்லது அல்ல. அதேபோல் நீங்கள் சரியாக நிறுவனத்தை தேர்தெடுத்து வாங்குவது நல்லது. அதேபோல் கடன் வாங்குவது உங்களின் வருமானத்தை பொருத்து வாங்குவதும் நல்லது.

Multiple Credit Inquiries:

உங்களின் கடன் விண்ணப்பங்களை ஒரு முறை அல்லது குறைவான முறையைக் மட்டும் விசாரிக்க அனுமதி கொடுக்க வேண்டும். கடன் அளிப்பவர் உங்களின்  தரத்தை ஒவ்வொரு முறையும் சோதிக்கும் போதும் அது கிரெடிட் ஸ்கோரில் பதிவாகும். ஆகவே உங்களின் கோப்புகளை உங்களின் கண்காணிப்பில் வைத்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் உங்களின் சிபில் ஸ்கோர் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement