City Union Bank Home Loan Interest Rate
இக்காலத்தில் சொந்த வீடு கட்டுவது என்பது அனைவரது கனவாகவே இருக்கிறது. ஏனென்றால், இக்காலத்தில் உள்ள பொருட்கள் அனைத்துமே வரவுக்கு மிஞ்சிய விலையாகத்தான் இருக்கிறது. அதிலும், ஒரு மாடி வீடு கட்டுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இதனை எளிமையாக்கும் வகையில் வங்கிகள் வீட்டு கடன்கள் வழங்குகின்றன. வீட்டு கடன் என்பது ஒரு குறிப்பிட்ட தொகையினை வங்கியில் பெற்று, அதனை மாதாந்திர தவணைகள் மூலம் திருப்பி செலுத்தும் முறையாகும். இந்தியாவில் பல்வேறு வங்கிகள் வீட்டு கடன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், சிட்டி யூனியன் வங்கியின் வீட்டுக் கடன் பற்றிய சில விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
City Union Bank Lome Loan Details in Tamil:
தகுதிகள்:
வருமானம் பெரும் அனைவரும் சிட்டி யூனியன் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுக்கொள்ளலாம்.
கடன் தொகை:
சிட்டி யூனியன் பேங்கில் அதிகபட்சம் 1 கோடி வரை வீட்டு கடன் வழங்கப்படுகிறது.
வட்டி விகிதம்:
சிட்டி யூனியன் பேங்கில் ஆண்டுக்கு 10.50% முதல் 13% வரை வட்டிவிகிதத்தில் வீட்டு கடன் வழங்கப்படுகிறது.
வருடத்தின் அடிப்படையில் வட்டிவிகிதம்:
25 லட்சத்திற்கும் குறைவான வீட்டு கடன்- ஆண்டுகள் அடிப்படையில் | வட்டி விகிதம் |
5 ஆண்டுகள் | 10.50% |
5 முதல் 10 ஆண்டுகள் வரை | 11% |
10 முதல் 15 ஆண்டுகள் வரை | 11.50% |
15 ஆண்டுகள் மேல் | 12.50% |
கடன் காலம்:
சிட்டி யூனியன் பேங்கில் வாங்கிய வீட்டு கடனை 15 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.
வீட்டு கடன் பெற தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- பாஸ்போர்ட்
- வாக்காளர் அடையாள அட்டை
- தொலைபேசி பில்
- ரேஷன் கார்டு
10 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் அதற்கான EMI மற்றும் மொத்த வட்டி தொகை:
10 Lakh Home Loan City Union Bank Calculator | ||||
கடன் தொகை | கடனுக்கான காலம் | EMI தொகை | மொத்த வட்டி தொகை | மொத்த கடன் தொகை |
10 லட்சம் ரூபாய் | 10 வருடம் | 14,638 ரூபாய் | 7,56,560 ரூபாய் | 17,56,560 ரூபாய் |
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |