மாதம் 2,000 ரூபாய் சேமித்தால் 3,15,738 ரூபாய் வரை கிடைக்கும் திட்டம்..!

Advertisement

City Union Bank RD Interest in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் ஏதாவது ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு அல்லது நடப்பு கணக்கினை வைத்திருப்போம். அப்படி நாம் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கிகள் நமக்கு பல வகையான சலுகைகள் மற்றும் சிறப்பான சேமிப்பு திட்டங்களை அளிக்கின்றன. அவ்வாறு நமக்கு வங்கிகளிடம் இருந்து கிடைக்கும் ஒரு சிறப்பான சேமிப்பு திட்டங்களில் ஒன்று தான் இந்த RD திட்டம் இந்த திட்டத்தில் சேமிப்பது என்பதில் பலருகும் விருப்பங்கள் இருக்கும். ஆனால் இந்த RD திட்டத்தில் எவ்வளவு ரூபாய் சேமிக்கலாம். அப்படி சேமித்தால் நமக்கு எவ்வளவு வட்டியும் முதிர்வு தொகையும் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் நாம் சேமித்தால் நமக்கு எவ்வளவு வட்டிவிகிதம் அளிக்கப்படும் போன்ற பலவகையான கேளிவிகளும் இருக்கும். அதனால் தான் இன்று City Union Bank RD திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

City Union Bank RD Interest Rates in Tamil:

City Union Bank RD Interest Rates in Tamil

இந்த RD திட்டத்தில் மாதமாதம் 100 ரூபாய் முதல் சேமிக்கலாம். அதேபோல் இந்த திட்டத்தில் 7 நாட்கள் முதல் 120 மாதங்கள் வரை சேமிக்கலாம். நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்து உங்களுக்கான வட்டிவிகிதம் மாறுபடும். காலத்தை பொறுத்து வட்டிவிகிதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதம்:

காலம் General Citizen Senior Citizen
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை 3.00% 3.00%
15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை 3.25% 3.25%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை 3.50% 3.50%
91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை 3.75% 3.75%
181 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை 4.00% 4.00%
271 நாட்கள் முதல் 364 நாட்கள் வரை 5.00% 5.00%
365 நாட்கள் முதல் 550 நாட்கள் வரை 5.50% 6.00%
551 நாட்கள் முதல் 3 ஆண்டுகள் வரை 5.75% 6.25%
3 ஆண்டுகளுக்கு மேல் – 5 ஆண்டுகள் வரை 5.50% 6.00%
5 ஆண்டுகளுக்கு மேல் – 10 ஆண்டுகள் வரை 5.25% 5.25%

 

மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் 1,62,205 ரூபாய் கிடைக்கும் அருமையான திட்டம்

உதாரணமாக இந்த RD திட்டத்தில் நீங்கள் மாதம் 2,000 ரூபாய் 10 வருடங்களுக்கு சேமிக்க தொடங்குகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இப்பொழுது நீங்கள் ஒரு General Citizen-க இருந்தால் உங்களுக்கு 10 வருட முடிவில் 75,738 ரூபாய் வரை வட்டியாக கிடைக்கும்.

அதேபோல் 10 வருட முடிவில் 3,15,738 ரூபாய் வரை முதிர்வு தொகை கிடைக்கும். இதுவே நீங்கள் Senior Citizen-க இருந்தால் உங்களுக்கும் 10 வருட முடிவில் 75,738 ரூபாய் வரை வட்டியாகவும் 3,15,738 ரூபாய் வரை முதிர்வு தொகையும் கிடைக்கும்.

666 நாட்களில் 1,14,573 ரூபாய் வரை அளிக்கும் அருமையான திட்டம்

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement