பேங்கில் 4 லட்சம் கார் லோன் வாங்கினால் அதற்கான வட்டி மற்றும் அசல்தொகை எவ்வளவு.?

Advertisement

Cub Car Loan Interest Rate in Tamil

பொதுவாக, நம் வங்கிகளில் கடன் பெறுவதற்கு முன் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.? எந்த வங்கியில் கடன் வாங்கினால் சிறந்தது.? போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு தெரிந்து கொள்வதற்கு உங்கள் ஊரின் அருகில் உள்ள வங்கிகளில் வழங்கக்கூடிய கடன்களை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, அந்த வகையில் சிட்டி யூனியன் வங்கியின் கார் லோன் பற்றிய விவரங்களை இப்பதிவில் தொகுத்துள்ளோம். சிட்டி யூனியன் வங்கி, தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இவ்வங்கி ஒரு இந்திய தனியார் துறை வங்கி ஆகும். இவ்வங்கியில் பலவகையான வங்கி கடன்கள் வழங்கப்படுகின்றன. அந்த கடன்களில் ஒன்றான கார் லோன் பற்றிய விவரங்களை பற்றிய விவரங்களை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Cub Bank Loan Car Loan Details in Tamil:

 cub car loan interest rate in tamil

வட்டி விகிதம்:

சிட்டி யூனியன் வங்கியில் கார் லோனிற்கு 12.25% என்ற அளவில் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

கடன் தொகை:

சிட்டி யூனியன் வங்கியில் நீங்கள் அதிகபட்சம் 25 லட்சம் ரூபாய் வரை கார் கடனை பெற்றுக்கொள்ளலாம்.

கடன் காலம்:

சிட்டி யூனியன் வங்கியில் நீங்கள் பெற்ற கார்கடனை அதிகபட்சம் 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.

செயலாக்க கட்டணம்:

சிட்டி யூனியன் வங்கியில் நீங்கள் பெற்ற மொத்த கடன்தொகையில் 1% செயலாக்க கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

 தகுதிகள்:

சம்பளம் பெரும் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் வணிகர்கள் சிட்டி யூனியன் வங்கியில் கார் கடன் பெறுவதற்கு தகுதியானவர்கள்.

வருமானம் பெறுபவர்களின் மாத வருமானம் 15,000 ரூபாய் ஆக இருக்க வேண்டும்.

சுயதொழில் செய்பவர்களின் ஆண்டு வருமானம் 1,50,000 ரூபாய் ஆக இருக்க வேண்டும்.

4 லட்சம் கார் லோன் பெற்றால் அதற்கான EMI மற்றும் அசல்தொகை எவ்வளவு.? 

கடனாக பெற்ற தொகை – 4 லட்சம்

வட்டி விகிதம் – 12.25%

மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை – 8,948 ரூபாய் 

மொத்த வட்டி தொகை – 1,36,904 ரூபாய் 

5 வருடத்தில் செலுத்தவேண்டிய மொத்தத்தொகை – 5,36,904 ரூபாய் 

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

 

பேங்கில் 7.5 லட்சம் வீட்டுக் கடன் வாங்கினால் மொத்த வட்டி தொகை எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா..?

வங்கியில் தங்கத்தை வைத்து 4 லட்சம் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement