Current Account vs Savings Account Which is Better in Tamil
நம் அன்றாட வாழ்க்கையில் வங்கி கணக்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பணத்தை சேமிப்பது, பரிவர்த்தனை செய்வது போன்ற பல தேவைகளுக்காக அனைவருமே வங்கி கணக்கு வைத்திருக்கிறார்கள். வங்கி கணக்கில் பலவகையான Accounts உள்ளது. அதில் அதிகமாக பயன்படுத்துவது Current Account மற்றும் Savings Account. இந்த இரண்டு கணக்கிற்கும் என்ன வித்தியாசம்.? இதில் எது சிறந்தது.? என்று உங்களுக்கு தெரியுமா..? வாருங்கள் அதற்கான பதிலை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
What is Current Account in Tamil:
நடப்பு கணக்கு என்பது நிறுவனங்கள், வணிகர்கள், வணிக குழுமங்கள் போன்றவர்களுக்கு ஏற்றத்தாகும். ஒவ்வொரு மாதமும் அதிக அளவிலான பணத்தை பரிவர்த்தனை(ட்ரான்ஸாக்சன்) செய்யும் நபர்களுக்காகவும் வணிகங்களுக்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு வகையான வைப்பு கணக்காகும்.இக்கணக்கில் வைக்கப்படும் தொகைக்கு எந்தவித வட்டியும் இல்லை. அதுமட்டுமில்லாமல் நடப்பு கணக்கில் வரம்பற்ற பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும். இந்தியாவில் நடப்பு கணக்குகளை வணிக வங்கிகள் வழங்குகின்றன.
வங்கியில் மொத்தம் எத்தனை கணக்கு உள்ளது தெரியுமா..? அதனை யார் துவங்குவது தெரியுமா..?
What is Savings Account in Tamil:
சேமிப்பு கணக்கு என்பது, ஒருவர் தங்களது பணத்தை வங்கியில் சேமித்து வைக்கவும், அதற்கான வட்டியை பெறுவதற்காகவும் உள்ள ஒரு வகையான வைப்பு கணக்காகும். இந்த கணக்கை ஒருவர் தனியாகவோ அல்லது வேறு யாருடனோ சேர்ந்து தொடங்கலாம்.சாதாரண மக்கள் வைத்திருக்கும் வங்கி கணக்கு பெரும்பாலும் சேமிப்பு கணக்காகத்தான் இருக்கும். இந்த சேமிப்பு கணக்கில் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்.
இந்தியாவில் சேமிப்பு கணக்கை வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் வழங்குகின்றன.
இந்தியன் வங்கியில் தனிநபர் கடன் 3 லட்சம் பெற்றால் எவ்வளவு வட்டி, EMI எவ்வளவு கட்ட வேண்டும் |
Difference Between Current Account And Savings Account in Tamil:
Savings Account (சேமிப்புகணக்கு) |
Current Account (நடப்பு கணக்கு) |
ஒருவர் எதிர்காலத்தின் பயன்பாட்டிற்காக பணத்தை சேமித்து வைக்க உருவாக்கப்பட்ட கணக்கு ஆகும். | ஒருவர் அதிக அளவிலான பணத்தை பரிவர்த்தனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட கணக்கு ஆகும். |
சேமிப்பு கணக்கில் நடப்பு வட்டியை விட அதிக வட்டியை வழங்குகின்றன. இதன் மூலம் நீங்கள் டெப்பாசிட் செய்யப்பட்ட நிதியில் பணம் சம்பாதிக்கவும் முடிகிறது. | சேமிப்பு கணிக்கை ஒப்பிடும் போது இதில் குறைவான வட்டி வழங்குகின்றன அல்லது வட்டி இல்லாமலும் இருக்கின்றன. |
இந்த கணக்கில் ஒரு வரையறுக்கப்பட்ட அளவில் மட்டுமே பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும் மற்றும் மாதத்திற்கு திரும்ப பெறக்கூடிய தொகையிலும் வரையறை உள்ளது. | இக்கணக்கில் அதிக அளவிலான பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும். வரம்பற்ற பரிவர்த்தனை மற்றும் நிதியை உடனடியாக அணுக முடியும். |
சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகைதான் இருக்க வேண்டும். ஆனால் அந்த தொகைக்கும் கீழே இருப்பு இருந்தால் கட்டணம் வசூலிக்கலாம். | பல நடப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை. ஆனால் சில குறிப்பிட்ட தொகைக்கு கீழே இருப்பு இருந்தால் கட்டணம் வசூலிக்கலாம். |
சேமிப்பு கணக்குகள், நடப்பு கணக்குகளை விட குறைவாக அணுகக்கூடியவை. | நடப்பு கணக்குகள் சேமிப்பு கணக்குகளை விட வேகமாக அணுகக்கூடியவை. |
Which is Better Current or Savings Account in Tamil:
நீங்கள் உங்களின் எதிர்காலத்தின் பயன்பாட்டிற்காக பணத்தை சேமிக்க வேண்டும் என்றால் சேமிப்பு கணக்கு சிறந்ததாகும். சேமிப்பு கணக்கில் அதிக வட்டிகள் வழங்குவதால் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அப்படி இல்லையென்றால், உங்கள் பணப்புழக்கத்தை திறமையாக நிர்வகிக்கவும் அதிக அளவிலான பணத்தை பரிவர்த்தனை செய்யவும் வேண்டுமென்றால் நடப்பு கணக்கு சிறந்தது.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |