Indian வங்கி மற்றும் SBI வங்கி..! Fixed Deposit செய்ய எது சிறந்தது..?

Advertisement

FD Indian Bank VS Sbi Which Is Better in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் ஒரு பயனுள்ள தகவலை தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதை தெரிந்து கொள்வதற்கு முன் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணத்தேவை என்பது இருக்கும் அல்லவா..! அப்படி நமக்கு ஏதும் பணத்தேவை ஏற்பட்டால் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்குவோம். அதுவே அவர்களிடமும் பணம் இல்லையென்றால் என்ன செய்வது..! அதற்கு தான் வங்கிகள் இருக்கிறதே. அனைத்து வங்கிகளும் நமக்கு உதவும் வகையில் பல வகையான கடன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று நாம் இந்தியன் பேங்க் மற்றும் SBI பேங்க் இரண்டில் பிக்ஸட் டெபாசிட் செய்ய எந்த வங்கி சிறந்தது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

போஸ்ட் ஆபிஸ் TD (Vs) SBI வங்கியின் FD முதலீடு செய்ய எது சிறந்தது தெரியுமா

ஃபிக்ஸட் டெபாசிட் செய்ய எந்த வங்கி சிறந்தது..? 

பொதுவாக Fixed Deposit என்பது நிலையான வைப்புத்தொகை (FD) என்று சொல்லப்படுகிறது. இந்த Fixed Deposit வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு வகையான நிதிக் கருவியாகும்.

இந்த Fixed Deposit திட்டத்தில் ஓப்புக்கொள்ளப்பட்ட வட்டி விகிதத்தில் நிலையான காலவரையறைக்கு உங்கள் வங்கியில் மொத்தத் தொகையைச் செலுத்த வேண்டும். பின் பதவிக்காலத்தின் முடிவில் நீங்கள் முதலீடு செய்த தொகையையும் கூட்டு வட்டியையும் பெறுவீர்கள்.

அதுபோல பிக்சட் டெபாசிட் செய்ய எந்த வங்கி சிறந்தது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காணலாம்.

போஸ்ட் ஆபிஸ் FD Vs வங்கி FD இரண்டில் வட்டி எதில் அதிகம் தெரியுமா

State Bank Of India:

indian bank vs sbi which is better

SBI வங்கி வழங்கும் அம்ரித் கலாஷ் என்ற டெர்ம் டெபாசிட் திட்டம் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. இந்த திட்டத்தை SBI வங்கியானது தற்போது மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.

இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் 400 நாட்கள் நீங்கள் விரும்பும் தொகையை முதலீடு செய்யலாம். இந்த திட்டமானது ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அப்படி 400 நாட்கள் வரை முதலீடு செய்யப்படும் இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.60% வரை வட்டி வழங்கப்படுகிறது. அதேபோல 60 வயதுக்கும் குறைவானவர்களுக்கு 7.10% வரை வட்டி வழங்கப்படுகிறது.

போஸ்ட் ஆபீஸ் NSC Vs FRSB இரண்டு திட்டத்தில் எது சிறந்தது

Indian Bank: 

indian bank vs sbi which is better

நம் நாட்டில் இருக்கும் வங்கிகளில் அதிக பயனர்களை கொண்ட வங்கி என்றால் அது இந்தியன் வங்கி தான். அப்படி இந்தியன் வங்கியானது IND SUPER 400 DAYS என்ற சிறப்பு வைப்பு நிதி திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் தற்போது அந்த திட்டத்தின் கால அளவை இந்தியன் வங்கி நீட்டித்துள்ளது.

இந்த வங்கியில் 10 அடிப்படை புள்ளிகளின் அடிப்படையில் அதிக வட்டி வழங்கப்படுகிறது. இந்த பிக்சட் டெபாசிட் திட்டமானது மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு ஏப்ரல் 19 ஆம் தேதி முடிகிறது என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ஜூன் 30 வரை இந்த திட்டத்தின் கால அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு 10,000 மற்றும் அதிகபட்ச முதலீடு 2 கோடி ரூபாய் ஆகும்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement