வங்கியில் நகையை வைத்து 5 லட்சம் கடன் வாங்கினால் அதற்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு.?

Advertisement

Gold Loan Details in Indian Bank in Tamil

நாம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க தொடங்கியதும் அப்பணத்தில் ஒரு தங்க நகையை வாங்கி வைப்போம். பிறகு, அதனை நமக்கு உடனடியாக பணம் தேவைப்படும் பொழுது அதனை வங்கிகளில் அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொள்ளுவோம். அப்படி வங்கிகளில் நகைக்கடன் பெறும்போது அதனை பற்றிய முழுவிவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் இந்தியன் வங்கியில் நகைக்கடன் பெறுகிறீர்கள் என்றால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்தியன் வங்கியின் நகைக்கடன் பற்றிய விவரங்கள்:

 indian bank gold loan details in tamil

நகை கடன் வட்டி விகிதம்:

இந்தியன் வங்கியில் தங்க நகைக்கடன் லோனுக்கு 8.95% முதல் 9.75% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

தகுதி:

இந்தியன் வங்கியில் குறைந்தபட்சம் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள நபர்கள் நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம்.

அதிகபட்ச தொகை:

இந்தியன் வங்கியில் நகையை வைத்து அதிகபட்சம் 10 லட்சம் வரை நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்:

  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு
  • வாக்காளர் அட்டை
  • பான் கார்டு
  • ஆதார் கார்டு
  • தொலைபேசி பில்

இந்த ஆண்டு இந்தியன் வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா..?

கடன் செலுத்தும் காலம்:

இந்தியன் வங்கியில் நீங்கள் பெற்ற நகைக்கடனை அதிகபட்சம் 3 வருடத்திற்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.

இந்தியன் வங்கியில் 5 லட்சம் நகைக்கடன் பெற்றால் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு.?

இந்தியன் வங்கியின் நகைக்கடன் வட்டிவிகிதம் – 8.95%

கடனாக பெற்ற தொகை – 5 லட்சம்

செலுத்த வேண்டிய காலம் – 3 வருடங்கள்

மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை – 15,888 ரூபாய்

செலுத்த வேண்டிய மொத்த வட்டித்தொகை – 71,975 ரூபாய்

மொத்தமாக செலுத்த வேண்டிய தொகை – 5,71,975 ரூபாய் 

தனிநபர் கடனாக இந்தியன் பேங்கில் 9.5 லட்சம் வாங்கினால் எவ்வளவு ரூபாய் வட்டி செலுத்த வேண்டும்..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement