HDFC கிரெடிட் கார்டு வைத்து இருப்பவரா நீங்கள்..! அப்போ முதலில் இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

hdfc credit card details in tamil

HDFC Credit Card Details 

இந்த தொழில்நுட்ப காலத்தை பொறுத்தவரை நாம் அனைவரும் நிறைய முன்னேற்றம் அடைந்து விட்டோம். அதிலும் குறிப்பாக வங்கி கணக்கு, மொபைல், கிரெடிட் கார்டு மற்றும் கார் போன்றவற்றை இல்லாமல் இருப்பதே இல்லை. ஏனென்றால் அவர்களுடைய தேவைக்கேற்ப முதலில் எந்த பொருட்கள் எல்லாம் தேவையோ அதனை வாங்கி கொள்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இப்போது வெளியில் எங்கு சென்றாலும் யாரும் பர்ஸை எடுத்து செல்வது இல்லை. அதற்கு மாறாக ATM கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் Debit கார்டு போன்றவற்றை தான் எடுத்து செல்கிறார்கள். இதுபோன்ற கார்டு வகைகளை நாம் பயன்படுத்தினால் மட்டும் போதாது அதில் இருக்கும் சில தகவலையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆகையால் கிரெடிட் கார்டு வகைகளில் ஒன்றன HDFC கிரெடிட் கார்டுகளில் உள்ள சில அம்சங்களை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ 2023-ல் HDFC வங்கியில் 2 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா. 

HDFC Credit Card Names:

  1. Money Back
  2. Indico
  3. Millennia
  4. Regalia
  5. Indian Oil

HDFC Credit Card Details in Tamil:

HDFC கிரெடிட் கார்டு ஆனது ஒருவரின் சம்பளம் மற்றும் தொழில் புரியும் நிலை இவற்றை அடிப்படையாக கொண்டு தான் வழங்கப்டுகிறது.

மேலும் ஒருவரின் சிபில் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து தான் அந்த நபருக்கான கிரெடிட் கார்டின் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.

HDFC-யில் தோராயமாக 5 வகையான கிரெடிட் கார்டுகள் வழங்கபடுகிறது. இந்த கார்டின் வருடாந்திர வட்டி விகிதமானது தோராயமாக 3.4% முதல் 40.8% வரை ஆகும்.

நீங்கள் பெற்ற கிரெடிட் கார்டின் தொகையினை திரும்ப செலுத்துவதற்கான காலம் என்று பார்த்தால் தோராயமாக 3 மாதம் முதல் 24 மாதங்கள் வரை ஆகும்.

உங்களுடைய தவணையினை EMI-யாக வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம். ஆனால் நீங்கள் தொகையினை மாதந்தோறும் செலுத்துவதற்கான தேதியில் தொகையினை செலுத்தவில்லை என்றால் உங்களுடைய தொகைக்கு ஏற்றவாறு அபராதம் விதிக்கப்படும். 

HDFC கிரெடிட் கார்டின் சிறப்பு அம்சங்கள்:

HDFC வங்கியில் ஒவ்வொரு மாதமும் சில அம்சங்கள் கொண்டு வரப்படும். அப்படி கொண்டு வரும் அம்சங்களில் Money Back, Indico மற்றும் Indian Oil ஆகிய கார்டுகளுக்கு Joining Fees மற்றும் Annual Fees என்பது இல்லாமல் அறிவிக்கப்படும்.

மற்ற இரண்டு கார்டுகளில் உங்களுக்கு Joining Fees மற்றும் Annual Fees ஆக 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை தோராயமாக கட்டணம் வசூலிக்கப்படும். அதே நீங்கள் 3 மாதத்திற்குள் 30,000 ரூபாய் உபயோப்படுத்தி சரியான நேரத்தில் பில் செலுத்தி இருந்தால் உங்களுக்கு Joining Fees மற்றும் Annual Fees இருக்காது என்றும் கூறப்படுகிறது.

HDFC கார்டினை பயன்படுத்தி அனைத்து வகையான ஆன்லைன் ஷாப்பிங்கையும் செய்து கொள்ளலாம். அதுமட்டும் இல்லாமல் Book My Show என்ற ஆப்பிள் இந்த கார்டு மூலம் நீங்கள் ஒரு Movie டிக்கெட் புக் செய்தால் மற்றொரு டிக்கெட் இலவசமாக கிடைக்கும் என்று தோராயமாக கூறப்படுகிறது.

மேலும் Amazon, Filpcart, Swiggy போன்றவற்றில் நீங்கள் ஆர்டர் செய்யும் போது உங்களுக்கு இந்த கார்டில் சில மதிப்பெண்கள் கிடைக்கும். எனவே கிரெடிட் கார்டு வாங்கினால் மட்டும் போதாது அதனை சரியான முறையில் பயன்படுத்தி பில்லினை கட்ட வேண்டும்.

குறிப்பு: இத்தகைய சிறப்பு அம்சங்கள் அனைத்தும் ஒவ்வொரு கார்டு ஏற்றவாறும் மாறும்.

தொடர்புடைய பதிவுகள்
HDFC Bank-ல் Credit கார்டு பெறுவதற்கான தகுதிகள் மற்றும் ஆவணங்கள் என்னென்ன..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking