HDFC Bank 2 Lakh Gold Loan Interest Rate in Tamil
நாம் அனைவருமே கையில் பணம் இருக்கும் போது அதில் தங்க நகையை வாங்கி வைப்போம். அதன் பிறகு, நமக்கு எதோவொரு தேவைக்காக அதிக பணம் தேவைப்படும்போது அதனை வங்கியிலோ அல்லது பிற நிறுவங்களிலோ அடகு வைத்து அதற்கான பணத்தை பெறுவோம். அப்படி நீங்கள் வங்கியில் தங்க நகையை அடகு வைத்து கடன் வாங்கும்போது, நாம் வாங்கிய தொகைக்கு எவ்வளவு வட்டி..? மாதம் எவ்வளவு EMI தொகை கட்ட வேண்டும்..? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அந்த வகையில் நீங்கள் ஒரு இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருந்து நகையை வைத்து 2 லட்சம் லோன் வாங்கினால் அதற்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
HDFC கோல்டு லோன் பற்றிய சில விவரங்கள்:
கடன் தொகை:
HDFC வங்கியில் குறைந்தபட்சம் 25,000 ஆயிரம் முதல் அதிகபட்சம் 50 லட்சம் வரை தங்க நகைக்கடன் வழங்கப்படுகிறது.
நகை மதிப்பு:
HDFC வங்கியில் 18 கேரட் முதல் 22 கேரட் வரையிலான தங்க நகைகளை வைத்து லோன் பெறலாம்.
வயது தகுதி:
18 வயது முதல் 65 வயதுடைய நபர்கள் HDFC வங்கியில் தங்க நகை கடன் பெற தகுதியானவர்கள் ஆவர்.
வட்டி விகிதம்:
HDFC வங்கியில் கோல்டு லோனிற்கு 11.00% முதல் 16.00% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
கால அளவு:
HDFC வங்கியில் நீங்கள் 2 வருட கால அளவை தேர்வு செய்து கோல்டு லோன் பெற்று கொள்ளலாம்.
உதாரணமாக,
நீங்கள் HDFC வங்கியில் நகையை வைத்து 2 வருட கால அளவை தேர்வு செய்து 2 லட்சம் லோன் பெறுகிறீர்கள் என்றால் உங்களுக்கு 11.00% வட்டி அளிக்கப்படுகிறது.
இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிட்டால் நீங்கள் மாதம் 9,321 ரூபாய் EMI செலுத்த வேண்டும். எனவே, நீங்கள் 2 வருடத்தில் மொத்த வட்டி தொகையாக 23,717 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஆகவே, நீங்கள் வட்டி தொகையுடன் சேர்த்து மொத்தமாக 2,23,717 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |