HDFC Bank Home Loan Eligibility and Documents in Tamil
இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக அனைவருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஏதாவது ஒரு நிதி நிறுவனம் மற்றும் வங்கியில் கடன் வாங்க நேரிடும். அப்படி வாங்கப்படும் கடன்களில் வீட்டு கடனும் ஒன்று ஆகும். வசதியானவர்காளாக இருந்தாலும் சரி, வசதி இல்லாதவர்களாக இருந்தாலும் சரி சொந்தமாக வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பதற்காக வங்கிகளில் கடன் பெறுகிறார்கள். அந்த வகையில் HDFC வங்கியில் வீட்டு கடன் பெற தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் என்ன என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> HDFC Bank-ல் Credit கார்டு பெறுவதற்கான தகுதிகள் மற்றும் ஆவணங்கள் என்னென்ன
HDFC Bank Home Loan Eligibility in Tamil:
வீட்டுக் கடன் பெறுவது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மிகப்பெரிய நிதி முடிவு ஆகும். இப்போதெல்லாம் வீட்டுக் கடனைப் பெறுவது என்பது ஒரு எளிய செயல் முறையாக இருக்கிறது.
வீட்டு கடன் பெறுவதற்கு என்ன தகுதி தேவை என்பதை இங்கு பார்ப்போம்.
தற்போதைய வயது மற்றும் மீதமுள்ள வேலை ஆண்டுகள்: வீட்டுக் கடன் பெறுவதற்கான தகுதியை தீர்மானிப்பதில் விண்ணப்பதாரரின் வயது முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக அதிகபட்சமாக கடன் காலம் பொதுவாக 30 ஆண்டுகள் வரை வரையறுக்கப்படுகிறது.
சம்பளம் பெறும் நபர்களுக்கான மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான வயது வரம்பு 21 முதல் 65 வயது வரை.
சம்பளம் பெறும் நபர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம்: ₹ 10,000
சுயதொழில் செய்பவர்களுக்கான குறைந்தபட்ச வணிக வருமானம்: ₹ 2 லட்சம்
பொதுவாக அதிகபட்ச கடன் காலம் 30 ஆண்டுகள்.
நிதி நிலை: விண்ணப்பதாரரின் தற்போதைய மற்றும் எதிர்கால வருமானம் கடன் தொகையை நிர்ணயிப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த கால மற்றும் தற்போதைய கடன் வரலாறு மற்றும் கிரெடிட் ஸ்கோர்: ஒரு சுத்தமான திருப்பிச் செலுத்தும் பதிவு வைத்திருப்பது வீட்டு கடன் வாங்குவதில் ஒரு முக்கிய தகுதியாக கருதப்படுகிறது.
பிற நிதிக் கடமைகள்: கார் கடன், கிரெடிட் கார்டு கடன்
இதையும் படித்துப்பாருங்கள்=> SBI -இல் வீட்டு லோன் பெறுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை
HDFC Bank Home Loan Required Documents in Tamil:
HDFC வங்கியில் வீட்டு கடன் பெற தேவையான ஆவணங்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
விவசாயிகள் | சம்பளம் வாங்கும் வாடிக்கையாளர்கள் | வணிகர்கள் – தொழில் வல்லுநர்கள் |
புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் | புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் | புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப் படிவம் |
அடையாளம் மற்றும் குடியிருப்பு சான்று | அடையாளம் மற்றும் குடியிருப்பு சான்று | அடையாளம் மற்றும் குடியிருப்பு சான்று |
கடந்த 6 மாத வங்கி அறிக்கைகள் | கடந்த 6 மாத வங்கி அறிக்கைகள் | கடந்த 6 மாத வங்கி அறிக்கைகள் |
செயலாக்கக் கட்டணச் சரிபார்ப்பு | செயலாக்கக் கட்டணச் சரிபார்ப்பு | செயலாக்கக் கட்டணச் சரிபார்ப்பு |
நிலம் வைத்திருப்பதை உறுதிப்படுத்தும் விவசாய நிலத்தின் உரிமை ஆவணங்களின் நகல்கள் | சமீபத்திய சம்பள சீட்டு | கல்வித் தகுதிச் சான்றிதழ் மற்றும் வணிகச் சான்று |
விவசாய நிலத்தின் உரிமை ஆவணங்களின் நகல்கள் பயிரிடப்படும் பயிர்களை குறிக்கின்றது | படிவம் 16 | வணிக விவரம் மற்றும் முந்தைய 3 வருட வருமான வரி அறிக்கைகள் (சுய மற்றும் வணிகம்) |
முந்தைய 2 வருட கடன்களின் அறிக்கை | – | முந்தைய 3 வருட லாபம்/நஷ்டம் மற்றும் இருப்புநிலை |
மேலே கூறியுள்ள ஆவணங்கள் அனைத்தும் தேவைப்படும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |