வங்கியில் நகையை வைத்து கோல்டு லோன் பெற்றால் 1 கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கப்படும் என்று தெரியுமா..?

Advertisement

HDFC Gold Loan Per Gram Rate in Tamil | HDFC Bank Gold Loan Per Gram Rate Today

வங்கியில் பல்வேறு வகையான லோன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, தனிநபர் கடன், தொழில் கடன், வீட்டு கடன், நகை கடன் மற்றும் கல்வி கடன் உள்ளிட்ட பல லோன்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு லோனிற்கும் ஒவ்வொரு வகையான வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. இந்த வட்டிவிகிதமானது ஒவ்வொரு பேங்கிற்கும் வேறுபடும். எனவே நீங்கள் வங்கியில் கடன் பெற போகிறீர்கள் என்றால் அக்கடனின் வட்டி உள்ளிட்ட பல விவரங்களை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அந்த வகையில் நீங்கள் HDFC வங்கியில் கோல்டு லோன் பெறப்போகிறீர்கள் என்றால் உங்கள் நகைக்கு எவ்வளவு வட்டி அளிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அதாவது, HDFC வங்கியில் 10 கிராம் நகையை வைத்து கோல்டு லோன் பெற்றால் 1 கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம்.

HDFC வங்கியில் 10 கிராம் நகையை வைத்து கோல்டு லோன் பெற்றால் 1 கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கப்படும்..?

 hdfc gold loan interest rate per gram in tamil

HDFC வங்கியில் நீங்கள் வைக்கப்படும் தங்க நகைக்கு இன்றைய மார்க்கெட் ரேட்டில் 75% வழங்கப்படுகிறது.

அதாவது, நீங்கள் 22 கேரட் மதிப்புள்ள 1 கிராம் நகையை வைத்து கடன் பெருகிறீர்கள் என்றால் 4,976 ரூபாய் வழங்கப்படுகிறது.

எனவே, 22 கேரட் மதிப்புள்ள 10 கிராம் நகையை வைத்து கடன் பெற்றால் மொத்தமாக 49,762 ரூபாய் வழங்கப்படுகிறது.

அதுவே, நீங்கள் 24 கேரட் மதிப்புள்ள 1 கிராம் நகையை வைத்து கடன் பெருகிறீர்கள் என்றால் 5,428 ரூபாய் வழங்கப்படுகிறது.

எனவே, 24 கேரட் மதிப்புள்ள 10 கிராம் நகையை வைத்து கடன் பெற்றால் மொத்தமாக 54,285 ரூபாய் வழங்கப்படுகிறது.

 hdfc gold loan minimum tenure in tamil

HDFC கோல்டு லோன் பற்றிய சில விவரங்கள்:

கடன் தொகை:

HDFC வங்கியில் குறைந்தபட்சம் 25,000 ஆயிரம் முதல் அதிகபட்சம் 3.50 கோடி வரை தங்க நகைக்கடன் வழங்கப்படுகிறது.

நகை மதிப்பு:

HDFC வங்கியில் 18 கேரட் முதல் 22 கேரட் வரையிலான தங்க நகைகளை வைத்து லோன் பெறலாம்.

வயது தகுதி:

18 வயது முதல் 65 வயதுடைய நபர்கள் HDFC வங்கியில் தங்க நகை கடன் பெற தகுதியானவர்கள் ஆவர்.

வட்டி விகிதம்:

HDFC வங்கியில் கோல்டு லோனுக்கு 9.90% முதல் 17.90% வரை வடிவிகிதம் அளிக்கப்படுகிறது.

கால அளவு:

HDFC வங்கியில் நீங்கள் 3 மாதம் முதல் 42 மாதம் கால அளவை தேர்வு செய்து கோல்டு லோன் பெற்று கொள்ளலாம்.

தொடர்புடைய பதிவுகள் 
HDFC வங்கியில் 5.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?
இந்தியன் வங்கியில் மாதம் 2000 ரூபாய் டெபாசிட் செய்தால் 1 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்..?
SBI வங்கியில் மாதம் 2000 ரூபாய் டெபாசிட் செய்தால் 1 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்..?

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement