Home Loan Prepayment Calculator Reduce EMI or Tenure HDFC Bank 30 Laks in Tamil
மனிதனின் வாழ்க்கையில் கடன் வாங்குவது சத்ரணமாகிவிட்டது. அதிலும் பலரும் வீட்டு கடனை வங்கியில் வாங்குகிறார்கள். காரணம் தன்னுடைய சொந்த வீட்டை கட்ட வேண்டும் என்பதற்காக கடன் வாங்குகிறார்கள். ஆனாலும் கடனை வாங்கி விட்டு பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். வாங்கிய தொகையை விட வட்டி தொகை அதிகமாகின்றது. வட்டி தொகையை குறைப்பதற்கு சில வழிகள் உள்ளது. அவற்றை பற்றி சரியாக தெரிவதில்லை. அதனால் தான் நம் பதிவில் வீட்டு கடனில் உள்ள வட்டியை குறைப்பதற்கு தினந்தோறும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் HDFC வங்கியில் 30 லட்சம் கடன் வாங்குனீர்கள் என்றால் அதற்கான வட்டியை குறைப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
HDFC வங்கியில் 30 லட்சம் வீட்டு கடன் வாங்கினால்:
வட்டி:
HDFC வங்கியில் வீட்டு கடனுக்கு தோராயமாக 8.95% முதல் 9.45% வரை வழங்கப்படுகிறது.
கடன் காலம்:
நீங்கள் வாங்கிய வீட்டு கடனை 30 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
EMI:
நீங்கள் வாங்கிய 30 லட்சம் வீட்டு கடனுக்கு மாதந்தோறும் EMI தொகையாக 24,031 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு மொத்த வட்டி தொகையாக 56,51,098 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். வாங்கிய கடை தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து 86,51,098 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
22 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் வட்டி மற்றும் EMI எவ்வளவு செலுத்த வேண்டும் என்று தெரியுமா.?
EMI செலுத்தும் தொகையை விட அதிகமாக செலுத்தினால் வட்டி எவ்வளவு இருக்கும்.?
கூடுதலாக செலுத்தும் தொகை | மொத்த வட்டி தொகை | வட்டி சேமிப்பு |
செலுத்த வேண்டிய EMI Rs.24,031 | Rs. 56,51,098 | 0 |
மாதம் EMI Rs. 24,031 மற்றும் கூடுதலாக வருடம் 1 லட்சம் | Rs.20,18,196 | Rs.3,63,2902 |
மாதம் EMI Rs. 24,031 மற்றும் கூடுதலாக வருடம் 2 லட்சம் | Rs.12,59,441 | Rs.4,39,1657 |
மாதம் EMI Rs. 24,031 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 5,000 ரூபாய் | Rs. 27,54,355 | Rs.2,89,6743 |
மாதம் EMI Rs.24,031 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் | Rs.19,07,081 | Rs.3,74,4017 |
மாதம் EMI Rs.24,031 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 1 லட்சம் | Rs.12,30,813 | Rs.4,42,0285 |
மாதம் EMI Rs. 24,031 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 2 லட்சம் | Rs. 9,00,249 | Rs. 4,75,0849 |
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |