20 லட்சம் வீட்டுக் கடனிற்கு EMI தொகையை விட கூடுதலாக தொகை கட்டினால் வட்டி எவ்வளவு குறையும் தெரியுமா..?

Advertisement

Home Loan Prepayment Calculator Reduce EMI or Tenure Indian Bank 20 Laks 

கடன் வாங்குவது என்பது நம்முடைய வாழ்க்கையில் சாதாரணமான ஒன்று. இவ்வாறு நாம் கடன் வாங்கும் முறை ஆனது ஒன்றாக இருந்தாலும் கூட அதனுடைய வகைகள் மற்றும் தேவை என்பது வெவ்வேறாக உள்ளது. அந்த வகையில் இந்த காலத்தில் உள்ள பெரும்பாலான நபர்கள் பிறரிடம் கடன் வாங்காமல் வங்கியில் சென்று தான் கடன் வாங்குககிறார்கள். அதுமட்டும் இல்லாமல் வங்கியில் வீட்டுக் கடன், தனிநபர் கடன், பிசினெஸ் கடன் மற்றும் கார் கடன் என பல கடன்கள் இருப்பதால் ஒவ்வொருவருக்கும் விருப்பமான கடன்களை வாங்குகிறார்கள். இவ்வாறு வாங்கிய கடனை EMI முறையிலும் திருப்பி செலுத்துகிறார்கள். ஆனால் இத்தகைய முறையில் EMI செலுத்தினாலும் கூட வருடத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை EMI உடன் கூடுதலான தொகையினை செலுத்தும் போது கடன் எத்தனை வருடங்களில் அடையும் என்றும், வட்டி சேமிப்பு எவ்வளவு என்பதும் பலருக்கு தெரியாமல் உள்ளது. அதனால் இன்றைய இதனை பற்றிய விவரங்களை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

கடன் தொகை:

indian bank

இந்தியன் வங்கியில் நீங்கள் வீட்டுக் கடனாக பெரும் தொகை 20,00,000 ரூபாய் ஆகும்.

வட்டி விகிதம்:

இதில் உங்களுக்கான வட்டி விகிதமாக 8.50% அளிக்கப்படுகிறது.

கடனுக்கான காலம்:

நீங்கள் கடனாக பெரும் தொகையினை 30 வருடத்திற்குள் செலுத்தி விட வேண்டும். அதாவது 360 மாதத்திற்கு செலுத்தி விட வேண்டும்.

கூடுதலாக தொகை செலுத்தினால் எவ்வளவு வருடங்களில் கடன் அடையும் மற்றும் எவ்வளவு வட்டி சேமிப்பு கிடைக்கும்..?

கூடுதலாக செலுத்தும் தொகை  மொத்த வட்டி தொகை  வட்டி சேமிப்பு 
மாதம் Rs. 15,378 EMI தொகை Rs. 35,36,177 Rs. 0
மாதம் EMI Rs. 15,378 மற்றும் கூடுதலாக வருடம் 1 லட்சம் Rs. 9,89,349 Rs. 34,37,828
மாதம் EMI Rs. 15,378 மற்றும் கூடுதலாக வருடம் 2 லட்சம் Rs. 5,77,163 Rs. 29,59,014
மாதம் EMI Rs. 15,378 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 5,000 ரூபாய் Rs. 14,30,046 Rs. 21,06,131
மாதம் EMI Rs. 15,378 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் Rs. 9,37,330 Rs. 25,98,847
மாதம் EMI Rs. 15,378 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 1 லட்சம் Rs. 5,70,287 Rs. 29,65,890
மாதம் EMI Rs. 15,378 மற்றும் கூடுதலாக மாதந்தோறும் 10,000 ரூபாய் மற்றும் வருடம் 2 லட்சம் Rs. 4,00,321 Rs. 31,35,856

 

Rd திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் செலுத்தினால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் தொகை கிடைக்கும்..

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement