ICICI Bank 7.5 Lakh Personal Loan EMI Calculator
பொதுவாக முந்தைய காலத்தில் எல்லாம் வங்கி என்றால் அதில் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு என இதுபோன்றவற்றை ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு வைத்து கொண்டு பயன் அடைந்து வந்தனர். ஆனால் காலப்போக்கில் வங்கி ஆனது கடன் வாங்குவதற்காகவும் பயன்பட ஆரம்பித்து விட்டது. இவ்வாறு மாறிக்கொண்டு போக போக ஒரு நபர் ஒரு கணக்கு மட்டும் இல்லாமல் மற்ற சில வங்கியிலும் கணக்கை வைத்து கொண்டிருந்தனர். அதுபோல வங்கியிலும் அவர் அவருக்கு ஏற்ற மாதிரியான கடனை வாங்கி பயன் அடைந்தனர். இதுபோல நாம் வங்கியில் நிறைய சேவைகளை பயன்படுத்தி கொண்டால் மட்டும் போதாது. அதில் இருக்கும் மற்ற வட்டி விகிதம் பற்றிய விவரங்களையும் தெளிவாக தெரிந்துக்கொள்ளவும் வேண்டும். அந்த வகையில் உதாரணமாக நீங்கள் ICICI வங்கியில் 7.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதாந்திர EMI தொகை எவ்வளவு, வட்டி எவ்வளவு, கடனை திரும்ப செலுத்துவதற்கான வருடம் எவ்வளவு என அனைத்து தகவலையும் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.
7.5 Lakh ICICI Bank Personal Loan EMI Calculator:
வட்டி விகிதம்%:
ICICI வங்கியில் நீங்கள் வாங்கிய தனிநபர் கடனுக்கான மொத்த வட்டி விகிதம் என்பது 10.50% முதல் 19% வரை வசூலிக்கப்படுகிறது.
கடனுக்கான காலம்:
அதேபோல நீங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்கான கடன் காலம் 5 வருடம் ஆகும்.
மாதாந்திர EMI தொகை:
7.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடனுக்கான மாதாந்திர EMI தொகையாக 16,120 ரூபாய் செலுத்த வேண்டும்.
மொத்த வட்டி தொகை:
உங்களுடைய கடனுக்கான மொத்த வட்டி தொகை என்பது 2,17,226 ரூபாய் ஆகும்.
மொத்த கடன் தொகை:
பொதுவாக வங்கியில் வாங்கிய கடனுக்கான மொத்த கடன் தொகையினை மொத்த வட்டி தொகை + கடன் பெற்ற தொகை என இரண்டினையும் ஒன்றாக சேர்த்து கூறுவது ஆகும்.
ஆகையால் 7.5 லட்சம் ரூபாய் தனிநபர் கடனுக்கான மொத்த கடன் தொகை 9,67,226 ரூபாய் ஆகும்.
குறிப்பு: நீங்கள் கடன் பெரும் தொகை மற்றும் திரும்ப செலுத்தும் காலம் இவை இரண்டையும் பொறுத்து EMI தொகை மற்றும் வட்டி தொகை மாறுபடும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |