ICICI Bank Credit Card Details
கிரெடிட் கார்டு என்பது நாம் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் நாம் அவசரமாக ஒரு இடத்திற்கு செல்லும் போது பர்ஸை எடுத்து செல்வதை விட கிரெடிட் கார்டினை தான் எடுத்து செல்கிறோம். நம்முடைய தேவைக்கு ஏற்ற பணத்தினை அத்தகைய கார்டி மூலம் பெற்றுக்கொள்கிறோம். அதனை எப்படி நாம் நம்முடைய தேவைக்காக பயன்படுத்துகிறோமோ அதுபோல அந்த கார்டில் உள்ள சில விஷயங்களையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் திடீரென அந்த கார்டில் உங்களுக்கு ஏதாவது ஒரு அபராத தொகையினை செலுத்தினாலும் கூட எதனால் அந்த அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படை செய்தியினையாவது தெரிந்துருக்க வேண்டும். ஆகையால் இன்றைய பதிவில் ICICI வங்கியின் கிரெடிட் கார்டு பற்றிய தகவல் மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
ICICI வங்கியில் 5 லட்சம் கார் லோனுக்கு EMI மட்டுமே இவ்வளவா..? அப்போ வட்டி எவ்வளவு இருக்கும்..! |
Names of ICICI Credit Card:
- Amazon pay Credit Card
- Platinum Credit Card
- HPCL Coral Credit Card
- Make my Trip Credit Card
- Unifare Credit Cards
- Expressions Credit Card
ICICI Credit Card Details in Tamil:
கிரெடிட் கார்டை பொறுத்தவரை நிறைய வகைகள் இருந்தாலும் கூட நம்முடைய சிபில் மதிப்பெண்ணின் அடிப்படையில் தான் கிரெடிட் கார்டில் தொகை வழங்கப்படுகிறது.
அதுபோல ICICI வங்கியில் சொந்தமாக தொழில் புரிபவர் மற்றும் மாத சம்பளத்திற்கு வேலை செய்பவர் என இரண்டு நபர்களும் கிரெடிட் கார்டு பெற்று கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
ICICI வங்கியில் 5-க்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் இருந்தாலும் கூட அதனுடைய வட்டியானது தோராயமாக 2.49% முதல் 3.40% வரை என்பது ஆகும்.
மேலும் உங்களுக்கு இந்த கார்டினை EMI கார்டாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
ICICI கிரெடிட் கார்டின் சிறப்பு:
ICICI வங்கியினை பொறுத்த வரை பெரும்பாலான கிரெடிட் கார்டுகளுக்கு Joining Fees மற்றும் Annual Fees என்பது உள்ளது. ஆனால் அதற்கான தொகை என்பது ஒவ்வொரு கார்டுக்கும் வேறுபடுகிறது.
மேலே சொல்லப்பட்டுள்ள கார்டின் வகைகளுக்கு தோராயமாக Joining Fees மற்றும் Annual Fees ஆனது 199 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை கார்டின் வகைக்கு ஏற்றவாறு பெறப்படுகிறது.
நீங்கள் ஆன்லைன் பர்ச்சேஸ் செய்ய வேண்டும் என்றால் அதனையும் நீங்கள் இதில் செய்து கொள்ளலாம். மேலும் இதற்கான ஒரு சில புள்ளிகளும் உங்களுக்கு வழங்கப்படும். அதுபோல ஒரு சில கிரெடிட் கார்டில் Book my Show ஆப்பிள் ஒரு Movie டிக்கெட் புக் செய்தால் அதற்கான சலுகைகள் உங்களுக்கு வழங்கப்படும்.
குறிப்பு: இத்தகைய சிறப்பு அம்சங்கள் அனைத்தும் ஒவ்வொரு கார்டு ஏற்றவாறும் மாறும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |