மாதம் Rs.6,375/- வட்டி பெற எவ்வளவு Deposit செய்யலாம் ?

Advertisement

ICICI Bank FD Interest Rates in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய கால கட்டத்தில் அனைவரும் எதிர்காலத்திற்கென்று சிறிதளவாவது சேமிக்க வேண்டும். அப்பொழுது தான் நமக்கு திடீர் என்று ஏதாவது தேவைக்கு பணம் தேவைப்படுகிறது என்றால், நாம் யாருடைய கைகளையும் எதிர்பார்க்க வேண்டி இருக்காது.

ஆக உங்களால் முடிந்தவரை சிறிய அளவிலாவது சேமிக்க பழகுங்கள். நீங்கள் சேமிப்பதாக இருந்தால் பொது வங்கிகளும் சரி, தனியார் வங்கிகளும் சரி மற்றும் அஞ்சல் அலுவலர்களும் சரி பலவகையான சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளனர். ஆக அவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து நீங்கள் சேமித்து வரலாம். சரி இங்கு ICICI வங்கி  வழங்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தை பற்றி அறியலாம் வாங்க.

ICICI Bank FD Interest Rates in Tamil

இது ஒரு ஒன்னு டைம் டெபாசிட் திட்டம் ஆகும். அதாவது உங்களிடம் ஒரு பெரிய தொகை இருந்து அதனை ஏதாவது ஒரு முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்து அத,ன் மூலம் வட்டி பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் இந்த ICICI பேங்க் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தின் முதலீட்டு காலம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை உள்ளது. 3இவற்றில் உங்களுக்கு எது ஏற்றதோ அதனை தேர்வு செய்து முதலீடு செய்து வரலாம்.

இந்த வங்கியில் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் குறைந்தபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து இந்த திட்டத்தில் கணக்கு திறக்கலாம். அதுவே அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது:

முதலீட்டு காலம் பொது மக்கள் மூத்த குடிமக்கள்
7 நாட்கள் முதல் 29 நாட்களுக்கு  3.00% 3.50%
30 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு 3.50%  4.00%
46 நாட்கள் முதல் 60 நாட்களுக்கு  4.25% 4.75%
61நாட்கள் முதல் 90 நாட்களுக்கு  4.50% 5.00%
91 நாட்கள் முதல் 184நாட்களுக்கு  4.75% 5.25%
185 நாட்கள் முதல் 270 நாட்களுக்கு  5.75% 6.25%
281 நாட்கள் முதல் 1 வருடம் வரை  6.00% 6.50%
1 வருடம் முதல் 15 மாதங்களுக்கு  6.70% 7.20%
15 மாதங்கள் முதல் 2 வருடத்திற்கு  7.10% 7.65%
2 வருடம் முதல் 5 வருடத்திற்கு  7.00% 7.50%
5 வருடம் முதல் 10 வருடத்திற்கு  6.90% 7.50%

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
வங்கியில் 2,000 முதலீடு செய்தால் 1,46,553/- கிடைக்கும் அசத்தலான திட்டம்..!

இரண்டு வருடத்திற்கு எவ்வளவு முதலீடு செய்தால் மாதம் மாதம் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

முதலீட்டு தொகை பொது மக்களுக்கு வழங்கப்படும்  மாத வட்டி (7.10%) மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் மாத வட்டி (7.65%)
25 ஆயிரம் 148 159
50 ஆயிரம் 296 319
1 லட்சம் 592 638
3 லட்சம் 1775 1913
5 லட்சம் 2958 3188
8 லட்சம் 4733 5100
10 லட்சம் 5917 6375

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement