ICICI RD Interest in Tamil
மனிதனாக பிறந்த அனைவருக்குமே நிறைய முக்கியமான கடமைகள் உள்ளது. அதாவது சொந்தமாக வீடு வாங்க வேண்டும், பிள்ளைகளை நன்கு படிக்கவைக்கவேண்டும் மற்றும் அவர்களுக்கு திருமணம் செய்து தர வேண்டும் போன்ற பல கடமைகள் உள்ளது. இவற்றை எல்லாம் நிறைவு செய்வதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அவ்வாறு நமது வாழ்க்கையின் மூலாதாரமாக உள்ள பணத்தை நாம் சேமித்து வைத்தால் மட்டுமே நமது அனைத்து கடமைகளையும் சரியாக செய்து முடிக்க வேண்டும். ஆனால் நீங்கள் சாதாரணமாக உங்கள் வீட்டிலேயே பணத்தை சேமித்து வைப்பதில் எந்த ஒரு பலனும் இல்லை. இதுவே நீங்கள் ஏதாவது போஸ்ட் ஆபிஸ், வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் சேமிக்க தொடங்கினார்கள் என்றால் உங்களுக்கு அதிக பலன் கிடைக்கும். இன்றைய சூழலிலும் பலருக்கும் எந்த முறையில் சேமிப்பது என்பதை ஒரு பெரிய குழப்பம் உள்ளது. அந்த குழப்பத்தை சரிசெய்வதற்காக தான் இன்று ICICI வங்கியின் RD திட்டத்தை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள போகின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த RD திட்டத்தில் சேமித்தால் எவ்வளவு வட்டியும் முதிர்வு தொகையும் கிடைக்கும் போன்றவற்றை எல்லாம் அறிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ICICI RD Interest Rates in Tamil:
இந்த திட்டத்தில் RD நீங்கள் மாதமாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் சேமிக்கலாம். அதேபோல் இந்த திட்டத்தில் நீங்கள் 6 மாதம் முதல் 120 மாதங்கள் (10 வருடம்) வரை சேமிக்கலாம்.
நீங்கள் சேமிக்கும் காலத்தை பொறுத்து உங்களுக்கான வட்டிவிகிதம் மாறுபடும். காலத்தை பொறுத்து உங்களுக்கு எவ்வளவு வட்டிவிகிதங்கள் கிடைக்கும் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
Canara வங்கியில் 1 லட்சம் செலுத்தினால் 2,04,132 ரூபாய் பெறக்கூடிய அருமையான திட்டம்
வட்டி விகிதம்:
காலம் | General Citizen | Senior Citizen |
6 மாதங்கள் | 6.25% | 6.75% |
9 மாதங்கள் | 6.50% | 7.00% |
12 மாதங்கள் | 6.90% | 7.40% |
15 மாதங்கள் | 7.10% | 7.60% |
18 மாதங்கள் | 7.10% | 7.60% |
21 மாதங்கள் | 7.10% | 7.60% |
24 மாதங்கள் | 7.10% | 7.60% |
27 மாதங்கள் | 7.50% | 8.00% |
30 மாதங்கள் | 7.50% | 8.00% |
33 மாதங்கள் | 7.50% | 8.00% |
36 மாதங்கள் | 7.50% | 8.00% |
3 ஆண்டுகள் – 5 ஆண்டுகள் | 7.25% | 7.75% |
5 ஆண்டுகள் – 10 ஆண்டுகள் | 7.25% | 7.50% |
மாதம் 2,000 செலுத்தினால் எவ்வளவு வட்டி மற்றும் முதிர்வு தொகை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி நீங்கள் மாதமாதம் 2,000 ரூபாயை இந்த RD திட்டத்தில் 10 வருடங்களுக்கு சேமித்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்று பார்க்கலாம்.
இப்பொழுது நீங்கள் ஒரு General Citizen-க இருந்தால் இந்த திட்டத்தின் முடிவில் உங்களுக்கு 1,12,236 ரூபாய் வரை வட்டியாக கிடைக்கும். அதேபோல் 10 வருட முடிவில் 3,52,236 ரூபாய் வரை முதிர்வு தொகை கிடைக்கும்.
ஒருவேளை நீங்கள் ஒரு Senior Citizen-க இருந்தால் இந்த திட்டத்தின் முடிவில் உங்களுக்கு 1,17,152 ரூபாய் வரை வட்டியாகவும் 3,57,152 ரூபாய் வரை முதிர்வு தொகையும் கிடைக்கும்.
மாதம் 2,000 ரூபாய் சேமித்தால் 3,15,738 ரூபாய் வரை கிடைக்கும் திட்டம்
666 நாட்களில் 1,14,573 ரூபாய் வரை அளிக்கும் அருமையான திட்டம்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |