2 லட்சம் செலுத்தி 2,77,249 ரூபாயாக அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!

indian bank 2 lakh fd interest rates calculator in tamil

Indian Bank 2 Lakh FD Interest Rates Calculator 

நம்முடைய பணத்தினை பணபரிவர்த்தனை செய்வதற்கு ஏதோ ஒரு வங்கியில் கணக்கு வைத்து இருப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதன் படி பார்த்தால் நம்மில் பலருக்கு தெரிந்த ஒரு வங்கியாக இந்தியன் வங்கி உள்ளது. இத்தகைய வங்கியில் கணக்கு வைத்து இருப்பதோடு மட்டும் இல்லாமல் வங்கியில் உள்ள திட்டங்களில் சேர்ந்து பணத்தினை சேமிப்பது என இவ்வகையான செயல்பாடுகளிலும் சிலர் சேர்ந்து பயன் அடைந்து வருகிறார்கள். அப்படி பார்த்தால் ஏதோ ஒரு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பணத்தினை சேமிப்பது என்பது நல்லதாக இருந்தாலும் கூட அதற்கான முழு விவரங்களை அறியாமல் இருப்பது என்பது மிகவும் தவறான ஒன்று.

அதனால் எந்த வங்கி, போஸ்ட் ஆபீஸ் மற்றும் நிதி நிறுவனம் என இவற்றில் எந்த திட்டத்தில் சேர்ந்தாலும் கூட அத்தகைய திட்டத்திற்கான வட்டி எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே இன்று இந்தியன் வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் 2 லட்சம் ரூபாய் 5 வருட கால அளவில் டெபாசிட் செய்தால் அசல் தொகையாக எவ்வளவு கிடைக்கும் என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

India Bank Fixed Deposit Scheme:

indian bank fixed deposit scheme in tamil

வயது தளர்வு:

இந்தியன் வங்கியில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 18 வயது நிரம்பிய ஆண்கள் மற்றும் பெண்கள் சேமிக்க தொடங்கலாம்.

சேமிப்பு தொகை:

இத்தகைய திட்டத்தில் உங்களுக்கான சேமிப்பு தொகையாக குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 கோடி வரையிலும் டெபாசிட் செய்து கொள்ளலாம். மேலும் சேமிப்பு தொகை என்பது உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது.

வட்டி விகிதம்%:

பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 2.8% முதல் 7.75% வரையிலும் அளிக்கப்படுகிறது. இதில் வட்டி விகிதம் ஆனது நீங்கள் தேர்வு செய்யும் முதிர்வு காலத்தினை பொறுத்து தான் அமையும்.

முதிர்வு காலம்:

சேமிப்பிற்கான காலமாக இதில் 7 நாட்கள் முதல் 10 வருடம் வரை அளிக்கப்படுகிறது. மேலும் நீங்கள் எந்த வருடத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆண்டிற்கு வட்டி விகிதமாக 8.2% அளிக்கும் SBI வங்கியின் புதிய சேமிப்பு திட்டம்.. 

2 லட்சம் செலுத்தினால் எவ்வளவு தொகை கிடைக்கும்:

மேலே சொல்லப்பட்டுள்ள விதிகளின் படி ஒரு நபர் 2 லட்சம் ரூபாயினை 5 வருட கால அளவில் செலுத்தினால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கிடைக்கும் என்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக:

சேமிப்பு காலம்  முதிர்வு காலம்  Normal Citizens Senior Citizens
வட்டி தொகை (6.25%)  அசல் தொகை  வட்டி தொகை (6.75%) அசல் தொகை 
2,00,000 ரூபாய் 5 வருடம்  70,816 ரூபாய் 2,70,816 ரூபாய் 77,249 ரூபாய் 2,77,249 ரூபாய்

 

5 வருடத்தில் வட்டியாக Rs. 2,24,517/- கிடைக்கும் தபால் துறை சேமிப்பு திட்டம் 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking