Indian Bank 5 Lakh Business Loan EMI Calculator in Tamil
இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன் மனநிறைவோடு கூடிய சுகமான வாழ்க்கை வாழவேண்டும் என்றால் அதற்கு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அப்படி நமக்கு தேவைபடும் பணத்தினை நாம் சம்பாதிக்க அதிக அளவு சம்பாதிக்க வேண்டும் என்றால் நாம் ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது ஒரு சுயதொழில் செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் ஒரு சுயதொழிலை துவங்க நினைக்கிறீர்கள் என்றால் அதற்கும் பணம் தேவைப்படும். அப்படி நமக்கு தேவையான பணத்தை நாம் மற்றவர்களிடம் சென்று கடனாக பெறாமல் நாமே ஏதாவது ஒரு வங்கி அல்லது நிதிநிறுவனகளிடம் இருந்து கடனாக பெற்று கொள்ளலாம். அப்படி நாம் பெரும் கடனை EMI முறையில் திருப்பியும் செலுத்தலாம். இப்பொழுது நீங்கள் ஒரு வங்கியில் தொழில் அல்லது வணிக கடன் பெற போகின்றீர்கள் என்றால் அதற்கு முன்பு நாம் பெறப்போகும் கடனுக்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு போன்ற தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்று Indian வங்கியில் 5 லட்சம் தொழில் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI என்பதையெல்லாம் அறிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Indian வங்கியில் 5 லட்சம் தொழில் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் EMI எவ்வளவு..?
தகுதி:
நீங்கள் இந்தியன் வங்கியில் வங்கியில் தொழில் கடன் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 60 வயதுக்கு உட்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
உங்களது நிறுவனத்தின் ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் ரூ.50 லட்சமாக இருக்க வேண்டும்.
மேலும் நீங்கள் இந்தியன் வங்கியின் நல்ல கிரெடிட் ஸ்கோரை பெற்றிருக்க வேண்டும்.
வட்டி விகிதம்:
இந்தியன் வங்கியில் 8.20 % முதல் 14.55 % வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.
கடன் காலம்:
நீங்கள் பெற்ற கடனை 12 மாதங்கள் முதல் 15 வருடங்கள் வரை திருப்பி செலுத்தும் வாய்ப்பு உள்ளது.
Indian Bank 5 Lakh Business Loan EMI Calculator in Tamil:
எடுத்துக்காட்டாக:
நீங்கள் இந்தியன் வங்கியில் 5 லட்சம் தொழில் கடனை 9.45% வட்டி விகிதத்தில் வாங்கும் பட்சத்தில் நீங்கள் செலுத்த வேண்டிய மாத EMI தொகை மற்றும் வட்டி தொகை எவ்வளவு என்று பார்க்கலாம் வாருங்கள்.
மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை 10,489 (5 வருடங்களுக்கு)
5 வருடங்களுக்கு நீங்கள் பெற்ற தொகைக்கு வட்டியாக ரூபாய் 1,29,340 செலுத்த வேண்டும்.
மொத்தமாக 5 லட்சம் தொழில் கடனுக்கு 9.45% வட்டி விகிதத்தில் 5 வருடங்கள் முடிவில் ரூபாய் 6,29,340 செலுத்த வேண்டும்.
உங்கள் தொகைக்கு மாத வட்டி மட்டும் 9, 250 அப்படினா, மெச்சூரிட்டி தொகை எவ்வோளோ இருக்கும் !
இரட்டிப்பு சந்தோசம், ஆமாங்க நீங்கள் 10,000 செலுத்தினால் 20,000 பெற கூடிய தபால் துறை திட்டம்..
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |