வங்கியில் 8 லட்சம் நகை கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா.?

Advertisement

Indian Bank 8 Lakh Gold Loan Interest Rate Calculator 

பொதுவாக பெண்களுக்கு எவ்வளவு தான் நகை வைத்திருந்தாலும் நகை மீது உள்ள மோகம் மட்டும் என்றும் குறையாது. வருடத்திற்கு ஒரு கிராம் குண்டு மணியாவது வாங்கி கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஏழைகள் நகை வாங்குவதே கஸ்டமான சூழ்நிலையில் அடகு வைப்பதற்கு தான். அப்படி நீங்கள் அடகு வைக்கும் போது அவசரத்திற்காக தனியாரில் சென்று அடகு வைக்கிறீர்கள். இதனால் வட்டி அதிகமாக இருக்கும். அப்போதைய தேவைக்கு நகையை அடகு வைத்து பணத்தை பெற்று கொள்கிறோம். ஆனால் அந்த பணத்தை செலுத்தும் போது தான் வட்டி அதிகமாக இருக்கிறதே என்று கவலைப்படுகிறார்கள். அதனால் உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் நகை கடனை வங்கிகள் வழங்குகின்றது. அந்த வகையில் இன்றைய பதிவில் நகையை வைத்து 8 லட்சம் கடன் வாங்கினால் வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

2 பவுன் செயினை வங்கியில் அடகு வைத்தால் எவ்வளவு கடன் வழங்குவார்கள்:

24 கேரட் உடைய 2 பவுன் செயினை இந்தியன்  வங்கியில் அடகு வைத்தால் 46210 ரூபாய் கடன் வழங்குவார்கள். அதுவே 22 கேரட் உடைய செயினை அடகு வைத்தால் 42900 ரூபாய் கடன் வழங்குவார்கள்.

வட்டி: 

இந்தியன் வங்கியில் தங்க நகைக்கடன் லோனுக்கு 8.95% முதல் 9.75% வரை வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.

அதிகபட்ச தொகை:

இந்தியன் வங்கியில் நகையை வைத்து அதிகபட்சம் 10 லட்சம் வரை நகைக்கடன் பெற்றுக்கொள்ளலாம்.

கடன் செலுத்தும் காலம்:

இந்தியன் வங்கியில் நீங்கள் பெற்ற நகைக்கடனை அதிகபட்சம் 3 வருடத்திற்குள் திருப்பி செலுத்துதல் வேண்டும்.

இந்தியன் வங்கியில் 8 லட்சம் நகைக்கடன் பெற்றால் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு.?

நீங்கள் இந்தியன் வங்கியில் வாங்கிய 8 லட்சம் நகை கடனுக்கு 3 வருடத்தில் 1,15,162 ரூபைய் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு மாதந்தோறும் EMI தொகையாக 25,421 ரூபாய் செலுத்த வேண்டும். 3 வருடத்தில் 8 லட்சம் நகை கடன் மற்றும் வட்டி தொகை என சேர்த்து 9,15,162 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த ஆண்டு இந்தியன் வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு வட்டி தெரியுமா..?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement