Indian Bank Business Loan in Tamil
உங்களுக்கு உதவிடும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய பல தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். பலரும் ஏதோ ஒரு தேவைக்காக வங்கிகளில் கடன் பெறுகிறார்கள். அப்படி பெரும் கடன்களில் வியாபார கடனும் ஒன்று. நாம் வங்கிகளில் கடன் பெறுவதற்கு முன் அந்த கடன் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று இந்தியன் வங்கியில் வியாபார கடன் பெறுவதற்கான தகுதி மற்றும் ஆவணங்கள் என்ன என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
SBI வங்கியில் வியாபார கடன் பெறுவதற்கான தகுதி மற்றும் விவரங்கள்..! |
வியாபார கடன் பெறுவதற்கான தகுதிகள்:
இந்தியன் வங்கியானது குறு, சிறு மற்றும் நடுத்தர மக்களுக்கு அவர்களின் செயல்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 15 ஆண்டுகள் வரையிலான வணிகக் கடன்களை வழங்குகிறது.
உற்பத்தி, வர்த்தகம் அல்லது சேவைகள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள சுயதொழில் செய்பவர்கள், உரிமையாளர்கள், பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்கள் போன்றவை இந்தியன் வங்கியில் வியாபார கடன் பெறலாம்.
இந்த வியாபார கடனுக்காக விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும். இதேபோல கடன் முதிர்வு நேரத்தில் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தியன் வங்கியில் வியாபார கடன் அதிகபட்சமாக 25 கோடி வரை வழங்கப்படுகிறது. இந்தியன் வங்கியில் வணிக கடன் வட்டி விகிதம் 8.30% ஆகும்.SBI வங்கியில் வழங்கும் வீட்டு கடன் வகைகள் மற்றும் அதன் நன்மைகள்..! |
வியாபார கடன் பெறுவதற்கான ஆவணங்கள்:
இந்தியன் வங்கியில் வணிக கடன் பெறுவதற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் கட்டாயம் தேவை.
- பான் கார்டு
- ஆதார் அட்டை
- கடவுச்சீட்டு (Passport)
- வாக்காளர் அடையாள அட்டை
- ஓட்டுனர் உரிமம் (Driving License)
முகவரி சான்றாக கொடுக்க வேண்டிய ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- கடவுச்சீட்டு (Passport)
- வாக்காளர் அடையாள அட்டை
- ஓட்டுனர் உரிமம்
- முந்தைய 6 மாதங்களின் வங்கி அறிக்கை இருக்க வேண்டும்.
- இருப்புநிலை மற்றும் முந்தைய 2 ஆண்டுகளுக்கான லாபம் மற்றும் இழப்புக் கணக்குடன், CA சான்றிதழ் இருக்க வேண்டும்.
- தொடர்ச்சிக்கான சான்று ITR, வர்த்தக உரிமம், விற்பனை வரி சான்றிதழ் வேண்டும்.
- கூட்டாண்மை பத்திரத்தின் சான்றளிக்கப்பட்ட நகல், Memorandum மற்றும் சங்கத்தின் கட்டுரைகளின் சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் வாரிய தீர்மானம் போன்றவை இருக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |