இந்தியன் வங்கியில் யாரெல்லாம் தங்க நகைக்கடன் பெற முடியும்.?

Indian Bank Gold Loan Interest Rates in Tamil

இந்தியன் வங்கி நகை கடன் வட்டி விகிதம் | Indian Bank Gold Loan Interest Rates in Tamil

இக்காலத்தில் நம் தேவைக்காக பல வங்கிகளில் கடன் வாங்குகிறோம். வீட்டு கடன், படிப்பு கடன் போன்ற பல கடன்கள் உள்ளன. அதுபோல நகை கடன் வாங்குவதும் ஒன்றாகி விட்டது. பல வங்கிகள் நகைக்கடன் வழங்குகிறது.  அந்த வகையில் இந்தியன் வங்கியில் நகைக்கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும்.? யாரெல்லாம் தகுதியானவர்கள்..? என்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

நகைக்கடன் என்றால் என்ன.?

இந்தியன் வங்கி நகை கடன் வட்டி விகிதம்

தங்க நகைக்கடன் என்பது ஒரு பாதுகாப்பான கடன் திட்டமாகும். வங்கிகள் அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் உங்களின் நகைகளை அடகு வைத்து அதற்கான பணத்தை பெற்று கொள்வது ஆகும். நகைகளை மீட்பதற்கான கால அவகாசம் ஒரு ஆண்டாக  இருக்கும். அதற்குள் நீங்கள் வட்டியுடன் பணம் செலுத்தி நீங்கள் அடகு வைத்த நகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

நகை கடன் வட்டி கணக்கிடுவது எப்படி?

 

இந்தியன் வங்கியில் தங்க நகைக்கடன் பெறுவதற்கு தகுதியானவர்கள்:

குறைந்தது 18 வயது அல்லது அதற்கு மேல்.

வங்கியில் அடமானம் வைக்க வேண்டிய நகைகள், ஆபரணங்கள், நாணயங்கள் போன்றவற்றை வைத்திருக்கும் அனைவரும்.

வங்கியில் நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.

இந்தியன் வங்கியில் தங்க நகைக்கடன் வட்டி விகிதங்கள்:

இந்தியன் வங்கியில் ஒரு கிராமிற்கு 8.95% முதல் 9.75% வரை வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.

இந்தியன் வங்கியில் வீட்டு கடன் பெறுவதற்கு ஆவணங்கள் மற்றும் வட்டி பற்றி தெரியுமா.?

 

இந்தியன் வங்கியில் தங்க நகைக்கடன் வாங்க தேவையான ஆவணங்கள்:

  • இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ.
  • பூர்த்தி செய்து கையெழுத்திட்ட தங்க நகைக்கடன் விண்ணப்பம்.
  • அடையாள ஆவணங்களில் பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் அரசு நிறுவனத்திடம் இருந்து ஒரு அடையாள அட்டை.
  • சமீபத்தில் உள்ள மொபைல் பில், சமீபத்திய கிரெடிட் கார்டு, தற்போதைய வீட்டு வாடகை ஒப்பந்தம் போன்றவை ஏற்றுக்கொள்ளக்கூடிய அடையாளங்களாகும்.

இந்தியன் வங்கியில் தங்க கடன் திட்டங்களின் விவரங்கள்:

வட்டி விகிதம் 8.95% – 9.75%
தொகைகள் அடகு வைக்கப்பட்டுள்ள நகையின் மதிப்பீட்டை பொறுத்து வழங்கப்படும்.
கடன் காலம்  6-12 மாதங்கள்

 

இந்தியன் வங்கியின் தங்க நகைக்கடன் திட்டங்களின் வகைகள்:

1. நகைக்கடன் திட்டம்:

வீட்டு தேவைகள், மருத்துவ செலவுகள், நுகர்வு, குடும்ப கடமைகள் போன்ற செயல்பாடுகளுக்கு தகுதியானது.

எந்தெந்த வங்கியில் எவ்வளவு நகை கடன் வட்டி விகிதம் தெரியுமா?

 

2. விவசாய தங்க கடன் திட்டம்:

பயிர் சாகுபடி, கோழி வளர்ப்பு, பால் பண்ணை, உரம், பூச்சிக்கொல்லிகள், போன்ற பல  இடுபொருட்களை வாங்குதல், திருப்பி செலுத்துதல் போன்றவற்றிற்கு அனைத்து தனிப்பட்ட விவசாயிகளும் இக்கடனை வாங்கி பயனடையலாம்.

3. தங்க நகைக்கடன் ஓவர் டிராப்ஃட் திட்டம்:

இந்தியன் வங்கி ஓவர்  டிராப்ஃட் திட்டத்தை வழங்குகிறது. இதன் மூலம், உங்களுக்கு ஓவர் டிராப்ஃட் வசதியாக கடன் தொகை வழங்கப்படுகிறது. இது கிரெடிட் கார்டு போல் செயல்படுகிறது. அங்கு நீங்கள் எப்போது  வேண்டுமானாலும் தங்க கடன் தொகையை செலவிடலாம். ஒட்டு மொத்த கடன் தொகைக்கும் கடன் வரம்பு இருக்கும்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking