இந்தியன் வங்கியில் வீட்டு கடன் 3 லட்சம் பெற்றால் EMI எவ்வளவு தெரியுமா…?

Advertisement

Home Loan in Indian Bank

வங்கிகளில் ஹோம் லோன் வசதியை பயன்படுத்திக் கொண்டு ஒரு வீட்டை கட்டிவிட வேண்டும் என்றே பலரும் திட்டமிடுவார்கள்.ஆனால், அதை எப்படி முறையாக செய்ய வேண்டும், வீட்டுக்கடனுக்கு எந்தெந்த வங்கிகளில் எவ்வளைவு வட்டி விகிதம் வசூலிப்பார்கள் போன்ற நடைமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை. மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும், அதில் ஒன்று தான் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளது. வீடு கட்டுவதற்காக பணத்தை சேமித்து வைத்து கட்ட ஆரமித்தாலும் செலவு அதிகமாகி கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். அப்போது நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் சென்று கடனை கேட்க அவசியமில்லை. ஏனென்றால் வங்கிகள் வீட்டு கடன், தனிநபர் கடன், நகை கடன், வாகன கடன் போன்ற கடன்களை வழகுகின்றது. இந்த கடன்களை வாங்கி உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். கடனை வாங்கிய பிறகு EMI முறை மூலம் கடனை திருப்பி செலுத்தி கொள்ளலாம். இந்த பதிவில் இந்தியன் வங்கியில் 3 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இந்தியன் வங்கியில் 3 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

indian bank housing loan emi calculator

இந்தியன் வங்கியில் விட்டுக்கடன்கள் கீழ்கண்ட வகைகளின் அடிப்படையில் வழங்குகின்றனர்.

  1. IB Home Loan Combo
  2. IB Home Improve
  3. IB Home Loan
  4. IB Home Loan Plus
  5. IB HOME ADVANTAGE
  6. IB HOME ENRICH

உங்கள் தேவைக்கு ஏற்ப புதிய வீடுகட்ட, வீடு வாங்க, வீட்டை மறுசீரமைக்க என்ன பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் வீட்டிற்கு கடன் வழங்க படுகிறது.

இன்று நாம் IB Home Loan Plus திட்டத்தின் கீழ் நீங்கள் பெரும் கடனுக்கான வட்டி முதல் EMI வரை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

தகுதி:

IB Home Loan Plus திட்டத்தின் கீழ் கடன் பெற இருப்பவர், தங்கள் வீட்டை புதுப்பிக்க இந்த கடன் வழங்கப்படுகிறது.

நீங்கள் கடன் பெற்றிருந்தால் 12 EMI களை தவறாமல் செலுத்திருக்க வேண்டும்.

கடன் வாங்குபவரின் CIBIL மதிப்பு சிறந்ததாக இருக்க வேண்டும்.

கடன் தொகை:

indian bank home loan emi prepayment calculator in tamil

குறைந்த பட்சம் 1 லட்சம் முதல் 10 கோடி வரை இந்த திட்டத்தின் கீழ் வழங்க படுகிறது.

வட்டி:

இந்தியன்  வங்கியில் வீட்டு கடனுக்கு வட்டியாக 9.00% முதல் 10.25% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

இந்தியன் வங்கியில் வீட்டு கடனை வாங்கிய பிறகு 15 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

மாதத்தவணை: 

நீங்கள் வாங்கிய 3 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக  மாதத்திற்கு 3,043 ரூபாய் செலுத்த வேண்டும். அதுபோல வாங்கிய 3 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 2,47,704 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 3 லட்ச ரூபாய்அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 5,47,704 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்

இந்தியன் வங்கியில் மாதம் 1000 செலுத்தினால் 5,58,763 ரூபாய் கிடைக்கக்கூடிய சூப்பர் திட்டம்….

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement