Indian Bank Savings Scheme
நம்மில் அனைவரும் காலத்திற்கு ஏற்ப சேமிப்பை தொடங்குகின்றோம். இன்றைய விலைவாசி உயர்வு காரணமாக பிற்காலத்திக்கு இப்போதே நம்மால் முடிந்த சிறு தொகையை சேமிக்கின்றோம். அப்படி சேமிக்கும் தொகை நமக்கு பாதுகாப்பானதாக இருக்கும். சேமிப்பு வங்கியில் இருந்து ஆரம்பிக்கின்றது. இப்படி சேமிக்கும் தொகை நமது குழந்தைகளுக்கும் பயன்னுள்ளதாக இருக்கும். பெண்கள் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்களில் ஒன்று நிதி ஆகும். இதை நிவர்த்தி செய்ய, இந்திய அரசு சுகன்யா சம்ரித்தி கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இது பெண் குழந்தைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் என்பது பெண் குழந்தைக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதன் மூலம் பெண்களுக்கான இலக்கு முன்னோக்கி செல்கிறது. வாருங்கள் இன்றைய பதிவில் பெண்குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டத்தில் இந்தியன் வங்கி தரும் சிறப்பு அம்சங்களை பார்ப்போம்.
Indian Bank Sukanya Samriddhi Yojana Scheme:
பெண் குழந்தைகளுக்கு என்று அறிமுகம் செய்த திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் ஆகும். இந்த திட்டத்தினை தமிழில் செல்வமகள் சேமித்து திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
வயது தகுதி:
10 வயது நிரம்பாத பெண் குழந்தைகள் இந்த திட்டத்தில் இணையலாம்.
டெபாசிட் தொகை:
இந்த கணக்கில் ஒரு நிதியாண்டில் ரூபாய் 250 முதல் ரூபாய் 1,50,000 வரை முதலீடு செய்யலாம்.
15 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.
வட்டி விகிதம்:
நீங்கள் செலுத்தும் தொகைக்கு ஆண்டுக்கு 8.20 % வட்டி அளிக்கப்படுகிறது.
முதிர்வு காலம்:
- கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 21 வருடங்கள் முடிவில் இந்த கணக்கு முதிர்வு அடையும்.
- குழந்தையின் வயது 18 நிரம்பிய பிறகு அல்லது 10ம் வகுப்பு நிறைவடையும் போது நீங்கள் முதலீடு செய்த தொகையில் 50% பெற்றுக்கொள்ளலாம்.
- மருத்துவம் சார்ந்த அவசர நிலைக்கு முன்கூட்டியே கணக்கை முடிக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது.
இரட்டிப்பு சந்தோசம், ஆமாங்க நீங்கள் 10,000 செலுத்தினால் 20,000 பெற கூடிய தபால் துறை திட்டம்..
கணக்கை தொடங்க தேவையான ஆவணங்கள்:
பெற்றோரின் Pan Card
குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
வரம்பு:
ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 குழந்தைகளுக்கு மட்டுமே இந்த கணக்கை தொடங்க முடியும்,
ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே திறக்க முடியும்.
Indian Bank Schemes for Girl Child in Tamil:
டெபாசிட் தொகை | வட்டி தொகை | மொத்த டெபாசிட் தொகை | முதிர்வு கால தொகை |
1,000 ரூபாய் | 29,897 ரூபாய் | 15,000 ரூபாய் | 44,897 ரூபாய் |
5,000 ரூபாய் | 75,000 ரூபாய் | 1,49,484 ரூபாய் | 2,24,484 ரூபாய் |
10,000 ரூபாய் | 2,98,969 ரூபாய் | 1,50,000 ரூபாய் | 4,48,969 ரூபாய் |
12,000 ரூபாய் | 1,80,000 ரூபாய் | 3,58,763 ரூபாய் | 5,58,763 ரூபாய் |
உங்கள் தொகைக்கு மாத வட்டி மட்டும் 9,250 அப்படினா, மெச்சூரிட்டி தொகை எவ்வோளோ இருக்கும் !
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |