Indian Bank SCSS Interest Rate in Tamil
மனிதனின் வாழ்க்கையில் சேமிப்பு என்பது ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் நாம் வாழ்நாள் முழுவதும் வேலை பார்த்து கொண்டே இருக்க முடியாது. 55 வயதிற்கு மேல் மனிதனுக்கு ஓய்வு தேவைப்படும். அதனால் அப்போது நாம் உட்கார்ந்து சாப்பிட வேண்டுமென்றால் இப்போது சம்பாதிக்கின்ற பணத்தை சேமித்து வைக்க வேண்டும். சேமிப்பைப் பொறுத்தவரை இந்தத் திட்டம் உங்களுக்கு பல்வேறு நன்மைகளை தரும். மாதம் மாதம் இந்த திட்டத்தின் மூலம் வருமானத்தை பெறமுடியும். இன்றைய பதிவில் இந்தியன் வங்கியின் SCSS சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Indian Bank Senior Citizen Scheme Details in Tamil:
தகுதி
- ஒரு தனிநபர் தனிப்பட்ட திறனில் அல்லது மனைவியுடன் கூட்டாக ஒரு கணக்கைத் திறக்கலாம்.
- என்ஆர்ஐ மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பம் இந்த விதிகளின் கீழ் கணக்கைத் திறக்கத் தகுதியற்றவர்கள்.
- 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதை எட்டிய ஒரு தனிநபர்.
- 55 வயது அல்லது அதற்கு மேல் ஆனால் 60 வயதுக்குக் குறைவான வயதை எட்டியவர் மற்றும் ஒரு கணக்கைத் திறக்கும் தேதியில் ஓய்வு பெற்ற அல்லது ஓய்வு பெற்றவர்.
- ஐம்பது வயதை எட்டிய பாதுகாப்புப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள்.
முதலீட்டு தொகை:
குறைந்தபட்சம் ரூபாய் 1,000 முதல் ரூபாய் 30 லட்சம் வரை இந்த திட்டத்தில் செலுத்தலாம்.
முதிர்வு காலம்:
5 வருட முதிர்வுக் காலத்திற்குப் பிறகு, டெபாசிட் செய்பவர் கணக்கை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.
வட்டி விகிதம்:
- இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 8.20% ஆகும். உங்கள் வைப்பு தொகைக்கு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி மாற்றி அமைக்கப்படும்.
- ஒவ்வொரு காலாண்டிலும் வட்டியை உங்கள் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் வசதி உள்ளது.
கிடைக்கும் வருமானம் :
முதிர்வு காலம் | டெபாசிட் தொகை | வட்டி தொகை | மொத்த தொகை |
5 வருடம் | Rs. 4,00,000 | Rs. 1,64,000 | Rs. 5,64,000 |
மாத வருமானம் :
- நீங்கள் செலுத்தும் தொகைக்கான வட்டி 3 மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
- நீங்கள் 1 லட்சம் வைப்புத்தொகையாக செலுத்தியிருந்தால் மதம் ரூபாய் 2,050 வரை கிடைக்கும்.
இந்தியன் வங்கியில் வீட்டு கடனுக்கான வட்டி EMI தொகை இவ்வளவு தானா…..
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |