இந்தியன் வங்கியில் வட்டி மட்டுமே 2,02,193 ரூபாய் தரக்கூடிய திட்டம் பற்றி தெரியுமா..?

Senior Citizen FD Rates For 5 Years

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பணம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. பணம் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை. இதனால் அனைவருமே பணத்தை சம்பாதிக்க ஒவ்வொரு வழிகளில் ஓடிக்கொண்டிருக்கிறோம். அப்படி நாம் சம்பாதிக்கும் பணத்தை  அன்றாட தேவைகளை பூர்த்தி செய்த பிறகு, மீதமுள்ள பணத்தை சேமித்து வைத்தால் மட்டுமே வாழ்க்கையின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். எனவே, பணத்தை சேமித்து வைப்பதற்கு பல வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல், குழந்தைகளுக்கென்று தனி சேமிப்பு திட்டம், பெண்களுக்கென்று தனி சேமிப்பு திட்டம் மற்றும் முதிவர்களுக்கான சேமிப்பு திட்டம் என பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அந்த வகையில் இந்தியன் வங்கியில் வழங்கப்படும் சீனியர் திட்டத்தில் 5 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி தொகை கிடைக்கும் என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Senior Citizen FD 5 Lakh Interest Rate Calculator in Tamil:

வயது தகுதி:

இத்திட்டத்தில் 60 வயதுடைய அல்லது அதற்கு மேற்பட்ட முதியோர்கள்  சேர தகுதியுடைவர்கள் ஆவர்.

டெபாசிட் தொகை:

இந்தியன் வங்கியின்  சீனியர் சிட்டிசன் பிக்ஸ்டு டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

வட்டி விகிதம்:

இந்தியன் வங்கியின்  சீனியர் சிட்டிசன் பிக்ஸ்டு டெபாசிட் திட்டத்திற்கு முதிர்வு காலத்தை பொருத்து வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. அதாவது 2.80% முதல் 6.85% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

3 மாதத்திற்க்கு ஒரு முறை 10,250 ரூபாய் வட்டி தரும் SBI திட்டம்

முதிர்வு காலம்:

இந்தியன் வங்கியில் சீனியர் சிட்டிசன் பிக்ஸ்டு டெபாசிட் திட்டத்திற்கு அதிகபட்ச முதிர்வு காலமாக 10 வருடம் வழங்கபடுகிறது.

5 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு கிடைக்கும்.?

இத்திட்டத்தில் 5 வருட முதிர்வு கால அடிப்படையில் 5 லட்சம் டெபாசிட் செய்தால் உங்களுக்கு 6.85% வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது.

எனவே நீங்கள் 5 லட்சம் டெபாசிட் செய்து மொத்த வட்டித்தொகையாக 2,02,193 ரூபாய் பெறலாம். மேலும், முதலீட்டு தொகை மற்றும் கிடைக்கப்பெறும் வட்டித்தொகையை  (5,00,000 + 2,02,193 = 7,02,193) சேர்த்து மொத்த தொகையாக  7,02,193 ரூபாயினை பெறலாம்.

ஆண்டிற்கு வட்டி விகிதமாக 8.2% அளிக்கும் SBI வங்கியின் புதிய சேமிப்பு திட்டம்..!

இந்தியன் வங்கியில் மாதம் 1000 செலுத்தினால் 5,58,763 ரூபாய் கிடைக்கக்கூடிய சூப்பர் திட்டம்….

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking