இந்தியன் வங்கி சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம்
இன்றைய காலத்தில் உள்ள பொருளாதார நிலையை சமாளித்து குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது கஷ்டமான ஒன்றாக இருக்கிறது. அதனால் அனைவருமே பணத்தை சேமிப்பது ரொம்ப முக்கியமானது. இப்பொது அவை உதவாமல் இருந்தாலும் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் நீங்கள் சேமிக்க வேண்டும் என்று நினைத்தால் திட்டங்களை அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். அதவது ஒரு திட்டத்தில் கிடைக்கும் வட்டி, சேமிப்பு தொகை, முதிர்வு தொகை போன்றவற்றை தெரிந்து கொண்ட பிறகு பணத்தை சேமிக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் உள்ள சீனியர் சேமிப்பு திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Indian Bank Senior Citizen Saving Scheme:
தகுதி:
இந்தியன் வங்கி சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்தில் 55 வயது முதல் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை 14,350 ரூபாயை வட்டியாக அளிக்கின்ற இந்தியன் வங்கி திட்டம்
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயும், அதிகபட்சம் 15 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம்.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்தில் முதிர்வு காலமாக 5 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது.
வட்டி:
வட்டியானது ஆண்டுதோறும் கணக்கிடப்படுகிறது. தற்போது வட்டி தோராயமாக 8.2% வழங்கப்படுகிறது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை கணக்கில் வட்டி தொகை செலுத்தப்படுகிறது.
2 லட்சம் செலுத்தி 2,77,249 ரூபாயாக அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்
எவ்வளவு கிடைக்கும்:
சேமிப்பு தொகை | 10 லட்சம் |
வட்டி | 8.2% |
முதிர்வு காலம் | 5 வருடம் |
3 மாதத்திற்கு ஒரு முறை கிடைக்கும் வட்டி தொகை | 20,500 ரூபாய் |
மொத்த வட்டி தொகை | 4,10,000 ரூபாய் |
மெச்சூரிட்டி தொகை | 14,10,000 ரூபாய் |
இந்தியன் வங்கியில் மாதம் 1000 செலுத்தினால் 5,58,763 ரூபாய் கிடைக்கக்கூடிய சூப்பர் திட்டம்….
1 லட்சத்திற்கு 400 நாட்களுக்கு வட்டி மட்டுமே 38,042 ரூபாய் இந்தியன் வங்கியின் FD திட்டத்தில் ……
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |