இந்தியன் வங்கியில் வாகனம் வாங்குவதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் வட்டி தெரியுமா.?

Advertisement

Indian Bank Vehicle Loan Interest Rate

வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆசை அனைவரிடமும் இருக்கும். இதற்காக வாகனக் கடன் என்பது தனிநபர் உபயோகத்திற்காக இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்கும் கடனாகும். பொதுவாக, கடன் வழங்குபவர் பணத்தைக் கடனாகக் கொடுக்கிறார் (வாங்குபவரின் சார்பாக டீலருக்கு நேரடியாகப் பணம் செலுத்துகிறார்), அதே சமயம் வாங்குபவர் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் சமமான மாதத் தவணைகளில் (EMIகள்) கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். வாங்குவதற்கு மாதம் மாதம் EMI செலுத்துவோம்.  அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் வாகன கடன் வாங்குவதற்கு ஆவணங்கள், தகுதிகள், வட்டிகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

யாரெல்லாம் வாகன கடன் பெறலாம்:

indian bank vehicle loan details in tamil

  1. மாதம் சம்பளம்  பெறுபவர்கள்
  2. தொழில் செய்பவர்கள்
  3. பிஸ்னஸ் மேன்
  4. சுய தொழில் செய்பவர்கள்
  5. ஓய்வூதியம் பெறுபவர்கள்

கடன் தொகை:

புதிய கார் புதிய இருசக்கர வாகனம் பயன்படுத்தப்பட்ட கார்
கடன் தொகை 2 கோடி வரை 10 லட்சம் வரை 1 கோடி வரை
கடன் தொகை செலுத்தும் காலம் 84 மாதங்கள் 48 மாதங்கள் 72 மாதங்கள்

 

புதிய வாகனம் ஆன் ரோடு விலையில் அடிப்படையில் கடன் தொகை வழங்கப்படுகிறது.

பயன்படுத்திய வாகனத்திற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்முதல் விலை அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலரால் குறிப்பிடப்பட்ட வாகனம்/விலையின் மதிப்பீட்டின் அடிப்படையில் கடன் தொகை கணக்கிடப்படுகிறது.

இந்தியன் வங்கியில் வீட்டு கடன் பெறுவதற்கு ஆவணங்கள் மற்றும் வட்டி பற்றி தெரியுமா.?

கடன் பெறுவதற்கு சம்பளம்:

தொழில் வகை  புதிய கார்  புதிய இரு சக்கர வாகனம்  பயன்படுத்தப்பட்ட கார்  அதிகபட்ச தகுதி 
மாத சம்பளம் பெறுபவர் ரூ.25000 ரூ.10000 ரூ.20000 48 முறை சம்பளம் பெற்றிருக்க வேண்டும்.
ஓய்வூதியம் பெறுபவர் ரூ.20000 ரூ.10000 ரூ.20000 36 முறை சம்பளம் பெற்றிருக்க வேண்டும்.
தொழில்முறை மற்றும் சுயதொழில் செய்பவர்கள் / வணிகர்கள் வருடத்திற்கு 3 லட்சத்திற்கு மேல் ITR வருடத்திற்கு 1.50 லட்சத்திற்கு மேல் ITR  வருடத்திற்கு 3 லட்சத்திற்கு மேல் ITR கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகபட்ச வருமானம் 3 முறை
நிறுவனம் வைத்திருப்பவர்கள் கடந்த 2 ஆண்டுகளில் லாபம் பெற்றிருக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் லாபம் பெற்றிருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

  1. கடன் தொகை விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டது.
  2. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  3. வருமான சான்றிதழ்
  4. 6 மாதங்களுக்கான வங்கி கணக்கு புத்தகம் நகல்
  5. ஓட்டுநர் உரிமம் நகல்

கடந்த 3 வருடங்களுக்கான வருமான வரி கட்டிய இரசீது

தற்போது தொலைபேசி பில்,  மின்சார பில், சொத்து வரி ரசீது, பாஸ்போர்ட்,  வாக்காளர் ஐடி, இருப்பிட சான்று, பான் கார்டு

அங்கீகரிக்கப்பட்ட டீலரிடமிருந்து வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல்

வாகன கடன் வாங்குவதற்கான வட்டி:

வகைகள்  வட்டி 
உயரடுக்கு வாடிக்கையாளர்களுக்கு வாகனக் கடன் (ரூ. 5 லட்சம் மற்றும் அதற்கு மேல்) 8.75% முதல் 8.95%
 வாகனக் கடன் ஈகோ வாகன் (எலக்ட்ரிக் கார்) எலைட் வாடிக்கையாளர்களுக்கு (ரூ. 5 லட்சம் மற்றும் அதற்கு மேல்) 8.7% முதல் 8.9%
பொது வாடிக்கையாளர்களுக்கு வாகனக் கடன் 8.95% முதல் 9.45%
 Eco Vahan (எலக்ட்ரிக் கார்) பொது வாடிக்கையாளர்கள் 8.9% முதல் 9.4%
பயன்படுத்திய கார்கள் வாங்குவதற்கு 10.55% முதல் 12.65%
2 சக்கர வாகனம் வாங்குவதற்கு 9.9% முதல் 11.4%
நிறுவனங்கள் /  பொதுத்துறை நிறுவனம் / மருத்துவமனைகளுக்கு “வேன் / மினிபஸ் / பேருந்து / ஆம்புலன்ஸ்” வாங்குவதற்கான கடன் 9.75% முதல் 10.4%

 

SBI -இல் வீட்டு லோன் பெறுவதற்கு என்ன ஆவணங்கள் தேவை..!

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement