நீங்க இந்தியன் வங்கி கஷ்டமரா அப்போ? நீங்க 555 நாட்களில் Rs.59,987/- வட்டியாக பெறலாம்

Special FD Scheme IND Shakti 555 Days Tamil

நீங்க இந்தியன் வங்கி கஷ்டமரா அப்போ? நீங்க 555 நாட்களில் Rs.59,987/- வட்டியாக பெறலாம் | Special FD Scheme IND Shakti 555 Days Tamil

நீங்கள் இந்தியன் வங்கி வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது. அதாவது இந்தியன் வங்கி 555 நாட்களுக்கான ஒரு Fixed Deposit ஸ்கீமை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. இந்த ஸ்கீம் குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

INDIAN Shakti 555 Days Scheme 2023:

INDIAN Shakti 555 Days Scheme 2023

இந்தியன் வங்கி IND Shakti 555 Days என்று ஒரு Fixed Deposit ஸ்கீமை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த ஸ்கிமின்னுடிய கால அளவாக 555 நாட்களை நிர்ணயம் செய்துள்ளனர்.

ஒரு முறை இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தீர்கள் என்றால் ஸ்கீமினுடைய கால அளவான 555 நாட்கள் முடிந்த பிறகு நீங்கள் டெபாசிட் செய்த தொகை மற்றும் அதற்கான வட்டியையும் மொத்தமாக நீங்கள் திரும்ப பெறலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2023 இல் ICICI வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு கம்மி தானா..?

இந்த ஸ்கீமினுடைய குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக 5000 ரூபாய் ஆகும். அதிகபட்ச டெபாசிட் தொகையாக 2 கோடி ரூபாய் வரை நீங்க டெபாசிட் செய்துகொள்ளலாம்.

இத்திட்டத்திக்கான வட்டிவிகிதம் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு 7 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுவே 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 7.55 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்கீமில் நீங்கள் பயன்பெற விரும்பினால் மார்ச் 31, 2023-ஆம் தேதிக்குள் இணைய வேண்டும். 2023 மார்ச், 23-க்கு பிறகு இந்த திட்டத்தில் நீங்கள் இணைய முடியாது.

உதாரணம்:

60 வயதிற்கும் குறைவாக உள்ளவர்கள் 5 லட்சம் ரூபாயை இந்தியன் வங்கியில் IND Shakti 555 Days Scheme-யில் 5 டெபாசிட் சேர்ந்தால் 555 நாட்களுக்கு பிறகு உங்களுக்கு வட்டி 55,808/- ரூபாய் மற்றும் நீங்கள் டெபாசிட் செய்த தொகையை சேர்த்து உங்களுக்கு 5,55,808/- ரூபாய் வழங்குவார்கள்.

அதுவே 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 5 லட்சம் ரூபாயை இந்தியன் வங்கியில் IND Shakti 555 Days Scheme-யில் 5 டெபாசிட் சேர்ந்தால் 555 நாட்களுக்கு பிறகு உங்களுக்கு வட்டி 59,978/- ரூபாய் மற்றும் நீங்கள் டெபாசிட் செய்த தொகையை சேர்த்து உங்களுக்கு 5,59,978/- ரூபாய் வழங்குவார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2023 ஆம் ஆண்டு SBI வங்கியில் 10 லட்சம் வீட்டுக்கடன் வாங்கினால் இவ்வளவு தான் வட்டியா..!

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking