மூன்று வருடத்தில் ரூ. 2.77 லட்சம் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..! IndusInd Bank Fixed Deposit Interest Rates 2023..!
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் IndusInd Bank Fixed Deposit-யின் வட்டி விகிதம் மற்றும் அதற்கான மெச்சுரிட்டி கால்குலேசன் ஆகியவற்றை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம். நீங்கள் குறைந்த காலத்தில் அதிக வட்டி தரக்கூடிய சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் இருப்பினும் எந்த திட்டத்தில் முதலீடு செய்யவது என்பது குறித்த விவரம் தெரியவில்லை என்றால் இந்த IndusInd Bank வழங்கும் Fixed Deposit சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். IndusInd Bank என்பது ஒரு தனியார் வங்கி ஆகும். Public Sector Banks-ஐ விட Private Sector Banks-யில் வட்டி விகிதம் என்பது கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் Loan Facility, Nomination Facility போன்ற வசதிகள் உள்ளது. சரி வாங்க IndusInd Bank Fixed Deposit திட்டத்தின் முழுமையான விவரங்களை இப்பொழுது பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👇 https://bit.ly/3Bfc0Gl
டெபாசிட் காலம்:
இந்த திட்டத்தில் டெபாசிட் காலம் என்பது 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது. ஆக நீங்கள் எவ்வளவு காலம் டெபாசிட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த டெபாசிட் காலத்தை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்?
இந்த IndusInd Bank Fixed Deposit-யில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம்.
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!
எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது? – IndusInd Bank Fixed Deposit Interest Rates 2023
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த திட்டத்தில் வட்டி விகிதம் கொஞ்சம் கூடுதலாகவே கிடைக்கும்.
டெபாசிட் காலம் | 60 வயதிற்கு குறைவானவர்கள் | 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் |
7 நாட்கள் முதல் 30 நாட்களுக்கு | 3.50% | 4.00% |
31 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு | 4.00% | 4.50% |
46 நாட்கள் முதல் 60 நாட்களுக்கு | 4.50% | 5.00% |
61 நாட்கள் முதல் 90 நாட்களுக்கு | 4.60% | 5.10% |
91 நாட்கள் முதல் 120 நாட்களுக்கு | 4.75% | 5.25% |
121 நாட்கள் முதல் 180 நாட்களுக்கு | 5.00% | 5.50% |
181 நாட்கள் முதல் 210 நாட்களுக்கு | 5.85% | 6.35% |
211 நாட்கள் முதல் 269 நாட்களுக்கு | 6.00% | 6.50& |
270 நாட்கள் முதல் 364 நாட்களுக்கு | 6.25% | 6.75% |
ஒரு வருடம் முதல் – ஒருவரும் + 6 மாதங்களுக்கு | 7.50% | 8.00% |
ஒருவரும் + 6 மாதம் முதல் மூன்று வருடம் மூன்று மாதங்களுக்கு | 7.75% | 8.20% |
மூன்று வருடம் மூன்று மாதங்கள் முதல் 61 மாதங்களுக்கு | 7.25% | 7.75% |
61 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் டெபாசிட் செய்தால் | 7.00% | 7.50% |
Tax Save Scheme (5 வருடத்திற்கு) | 7.25% | 7.75% |
இந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள வட்டி விகிதத்தில் எந்த டெபாசிட் காலத்திற்கு அதிகமாக வட்டி வழங்கப்படுகிறது என்றால் ஒருவரும் + 6 மாதம் முதல் மூன்று வருடம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் டெபாசிட் காலத்திற்குத்தான் அதிகமாக வட்டி வழங்கப்படுகிறது. ஆக இவற்றில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
டெபாசிட் தொகை | பொது பிரிவினர் | மூத்த குடிமக்கள் | ||
வட்டி | மெச்சுரிட்டி தொகை | வட்டி | மெச்சுரிட்டி தொகை | |
10,000/- | 2,589/ | 12,589/- | 2,776/- | 12,776/- |
50,000/- | 12,947/- | 62,947/- | 13,880/- | 63,880/- |
1,00,000/- | 25,895/- | 1,25,895/- | 27,760/- | 1,27,760/- |
5,00,000/- | 1,29,474/- | 6,29,474/- | 1,38,799/- | 6,38,799/- |
10,00,000/- | 2,58,948/- | 12,58,948/- | 2,77,599/- | 12,77,599/- |
இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
444 நாளில் ரூ.1,01,806/- வட்டி தரும் அருமையான சேமிப்பு திட்டம்..!
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |