KVB வங்கியில் கோல்ட் லோன் பெற்றால் 1 கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது.?

Advertisement

Karur Vysya Bank Gold Loan 1 Gram Rate in Tamil | KVB Gold Loan Interest Rate for 1 Lakh

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கரூர் வைஸ்யா வங்கி நகை கடன் பெற்றால் 1 கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். கரூர் வைஸ்யா வங்கி என்பது கரூரை தலைமையிடமாக கொண்டு செய்லபடும் வங்கியாகும். இவ்வங்கி ஆனது, 1916 இல் எம்.ஏ.வெங்கடராம செட்டியார் மற்றும் அதி கிருஷ்ண செட்டியார்  ஆகியோரால் தொடங்கப்பட்டது.

Karur Vysya வேங்கியிற்கு 831 கிளைகளையும் 1,650 ஏடிஎம்களையும் கொண்டுள்ளது. இவ்வங்கியில் பல வகையான லோன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றான கோல்டு லோன் பற்றிய விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், 1 கிராம் கோல்டுற்கு எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பதையும் கொடுத்துள்ளோம்.

Karur Vysya Bank Gold Loan Per Gram Rate 2025:

Karur Vysya Bank Gold Loan Per Gram Rate 2025

Karur Vysya Bank Gold Loan
வட்டி விகிதம்  9.80% – 10.75% p.a.
கால அளவு  அதிகபட்சம் 1 வருடம் 
கடன் தொகை ரூ.10,000/- முதல் ரூ.2,00,00,000
LTV ratio 75%
வயது வரம்பு  18 வயது முதல் 70 வயது வரை 

மேலும், கரூர் வைஸ்யா வங்கியில் வழங்கப்படும் பல்வேறு நகைக்கடன் திட்டத்தின்படி வட்டி விகிதம் அளிக்கப்டுகிறது. அவை பின்வருமாறு:

நகைக் கடன் (வர்த்தகம்) – 12 மாதங்கள்/CGL12 10.40%
KVB விரைவு நகைக் கடன் (வர்த்தகம்) – 6 மாதங்கள்/CGL6 10.30%
நகைக் கடன் (மற்றவை) – 12 மாதங்கள்/RGL12 10.65%
KVB விரைவு நகைக் கடன் (மற்றவை) – 6 மாதங்கள்/RGL6 10.65%
KVB – ஸ்வர்ண மித்ரா திட்டம் ஓவர் டிராஃப்ட் 9.80%

கட்டணங்கள்:

  • ரூ.50,000 வரை கடன் வரம்பு ரூ.200 ஆகும்.
  • ரூ.1 லட்சம் வரை கடன் வரம்பு ரூ. 400 ஆகும்.
  • ரூ.1 லட்சத்திற்கு மேல் மற்றும் ரூ.2 லட்சத்திற்குள் கடன் வரம்பு ரூ.800 ஆகும்.
  • ரூ. 2 லட்சத்திற்கு மேல் மற்றும் ரூ. 3 லட்சத்திற்குள் கடன் வரம்பு: ரூ. 1000 ஆகும்.
  • ரூ.3 லட்சத்திற்கு மேல் ரூ. 2000 ஆகும்.

KVB வங்கியில் கோல்ட் லோன் பெற்றால் 1 கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கப்படும்.?

கரூர் வைஸ்யா வங்கியின் ஒரு கிராமுக்கு தங்கக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் தயாரிப்பைப் பொறுத்து ₹4,735 முதல் ₹ 5,005 வரை வழங்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக,

நீங்கள், கரூர் வைஸ்யா வங்கியில் நகைக்கடன் பெறுகிறீர்கள் என்றால், LTV Ratio ஆனது 75 சதவீதத்தின்படி நகைக்கடன் வழங்கப்படுகிறது.  அதன்படி பார்த்தால் 22 கேரட் மதிப்புள்ள 1 கிராம் தங்கத்திற்கு 5,593 ரூபாய் வழங்கப்படுகிறது. அதுவே, 24 கேரட் என்றால் 6,101 ரூபாய் வழங்கப்படுகிறது. 

கரூர் வைஸ்யா வங்கியின் தங்க நகை கடனின் அம்சங்கள்:

கரூர் வைஸ்யா வங்கி ரூ.2 கோடி வரையிலான கடன்களை வழங்குகிறது.

தேவையான ஆவணங்கள்:

  • அடையாளச் சான்று
  • குடியிருப்புச் சான்று
  • கையொப்பமிடப்பட்ட விண்ணப்பப் படிவம்

குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ள கடன் தொகை தோராய மதிப்பில் கூறப்பட்டுள்ளது. நீங்கள் வைக்கும் நகையின் அளவை பொறுத்து கடன் தொகை மாறுபடலாம்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement